legal adoption
சட்டபூர்வத் தாதேடுப்பு
தமிழ் விளக்கம்
தத்தெடுத்தல் என்பது இரத்த உறவு (மரபணு தொடர்பு) இல்லாத குழந்தைக்குப் பெற்றோராகச் (வளர்ப்புத் தந்தை அல்லது தாய்) செயற்படல் ஆகும். தத்தெடுக்கப்படுவதால் குழந்தையின் மீது அதன் உண்மையான பெற்றோருக்கு இருக்கும் உரிமை இல்லாமலாகி, தத்துப் பெற்றோரே அக்குழந்தைக்கு முழுப் பொறுப்பாளராகி, அப் பெற்றோருக்கு இயற்கையாகப் பிறந்த குழந்தைகளுக்கு உரிய சகல உரிமைகளையும் சட்டபூர்வமாக பெறுவர். தத்தெடுத்தல் என்பது சட்ட பூர்வமாகச் செய்யப்படுவது. அதுதான் பிற்காலத்தில் உரிமையை தக்கவைத்துக்கொள்ளவும், வேறு சிக்கல்களிலிருந்து விடுபடவும் வழிவகுக்கும். பொதுவாக, குழந்தைப் பேறு இல்லாதவர்களே பிள்ளைகளைத் தத்தெடுப்பார்கள். சில வேளைகளில், உடன்பிறந்தோர் பிள்ளைகளை தத்தெடுக்கும் வழமையும் உண்டு. பணம்படைத்தோர் வசதியற்றோரைத் தத்தெடுக்கும் வழக்கம் உண்டு. தத்தெடுப்புகளில் பலவகையுண்டு 1. மானியத் தத்தெடுப்பு (subsidized adoption), 2. சுயாதீன தத்தெடுப்பு (independent adoption), 3. நிறுவனம் சாராத தத்தெடுப்பு (gray-market adoption), 4. சட்டபூர்வமற்ற தத்தெடுப்பு (black-market adoption), 5. பிறநாட்டுக் குழந்தைகளைத் தத்தெடுத்தல் (intercountry adoption). சட்டபூர்வமற்ற தத்தெடுப்பு என்பது, ஒரு குழந்தையின் பாதுகாவலரிடம் பணத்தை நேரடியாகக் கொடுத்து, குழந்தையை நேரடியாகப் பெற்றுக்கொள்வது.
English
The legal process by which a parent-child relationship is created between people genetically unrelated. Those who are legally adopted become heir to all the privileges with the parents that natural children would have. Technically, because adoption is a legal process, this term should be redundant. However, it often is used by social workers, necessitated by the practice of black-market adoption.