legal aid
சட்ட உதவி
தமிழ் விளக்கம்
மக்களின் வருமானத்தைக் கருத்தில்கொள்ளாது, அவர்களுக்குத் தேவையான நீதி கிடைக்க, வழக்கறிஞர்கள் வைத்து வழக்கு நடத்த முடியாத ஏழை எளியவர்களுக்கு அரசாங்கமே வழக்கறிஞர் ஏற்பாடு செய்து வழக்கு நடத்திக் கொள்ள உதவிசெய்யும் நடைமுறையே சட்டஉதவி ஆகும். இதற்குண்டான செலவுகளை அரசாங்கமே வழக்கறிஞர்களுக்கு கொடுக்கிறது. ஏழைகளுக்குத் தேவையான சட்ட உதவி கிடைப்பதை உறுதிப்படுத்துவதே இலவச சட்ட உதவி மையங்களின் நோக்கம். சட்டத்தின் முன் எல்லோரும் சமம், அனைவருக்கும் சமநீதி கிடைக்க வேண்டுமென்றும், ஏழைகள், எழுத்தறிவு இல்லாதாவர்கள், சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்குத் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள இலவச சட்ட உதவி (free legal aid) அளிக்க வேண்டுமென்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 39A மூலம் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த நோக்கத்தை நிறைவேற்ற, இந்திய அரசு தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தை, 1987 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டப் பணிகள் ஆணையச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தியது. அனைத்து மாநிலத் தலைநகரங்கள், மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் எங்கெல்லாம் நீதிமன்றங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் இலவச சட்ட உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு குழுவிலும், ஆலோசனை மையங்கள் செயல்படுகின்றன. இவை தவிர மாவட்டங்களில் நீதிமன்றங்கள் இல்லாத ஊர்களிலும் சமரச மையங்கள் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் மற்றும் சில குறிப்பிட்ட ஊர்களிலும் பெண்களுக்கான தனி சட்டஉதவி மையங்களும் தொடங்கப்பட்டுள்ளன.
English
The provision of free or reduced-fee legal counsel to a litigant who cannot afford a private attorney. Legal aid offices exist throughout the United States and many other nations and are sponsored by local bar associations, law schools, and government organizations. See also Legal Services Corporation (LSC).