legal regulation
சட்டபூர்வமான கட்டுப்பாடுகள்
தமிழ் விளக்கம்
சட்டபூர்வமான கட்டுப்பாடுகள் என்பது ஒரு நடத்தையிலிருக்கும் குறைபாடுகளைத் தவிர்க்க சம்பந்தப்பட்ட அரசுகள், (உள்ளூர், மாநில, மத்திய அரசு அல்லது அது தொடர்புடைய நிறுவனங்கள்) ஏற்படுத்தியிருக்கும் விதிமுறைகள். இது சட்டமாகவோ அல்லது நிர்வாக விதிமுறைகளாகவோ இருக்கலாம். சட்டத்தில் சொல்லப்படாவிட்டாலும், இந்த விதிமுறைகளுக்குச் சட்ட அங்கீகாரம் உண்டு. அதை மீறுவது தண்டனைக்குரிய செயல். சமூகப்பணியைப் பொறுத்த வரை, சமூகப்பணியாளராக பணியாற்ற உரிமம் (licensing) பெறுவது, சான்றிதழ் பெறுவது (certification), பதிவு செய்து கொள்வது (registration) போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள், தங்களுக்கு உதவும் சமூகப்பணியாளர்கள், போதுமான கல்வியறிவும், தகுதியும் பெற்றவர்கள்தானா என்று பொதுமக்கள் புரிந்துகொள்ள உதவும்.
கட்டுப்படுதல் என்பது ஒரு செயலைச் சரியாகவும், விரைவாகவும் செய்துமுடிக்க உதவும் என்பதை புரிந்துகொண்டு அதைப் பின்பற்ற வேண்டும்.
கட்டுப்படுதல் என்பது ஒரு செயலைச் சரியாகவும், விரைவாகவும் செய்துமுடிக்க உதவும் என்பதை புரிந்துகொண்டு அதைப் பின்பற்ற வேண்டும்.
English
The control of certain activities, such as professional conduct, by government rule and enforcement. In social work, legal regulation occurs through licensing, certification, or registration of social workers. In each of these, the public is assured by the relevant legal jurisdiction that the social worker possesses the knowledge or qualifications required by law to receive that designation.