legislative advocacy
ஆதரித்து / பரிந்தாதரித்துப் பேசுதல்
தமிழ் விளக்கம்
Advocacy என்றால் ஒரு கருத்தை அல்லது நிகழ்ச்சியை தன் கட்சிக்காரர் சார்பாக, ஆதரித்தோ எதிர்த்தோ வாதிட்டு உதவுவது. 1. தன்னுடைய வாடிக்கையாளருக்காகப் பிரதிநிதியாவதும், அவர்களுக்காகப் பரிந்துபேசி வாதிடுதலும். தனிமனித மற்றும் சமூக உரிமைகளுக்காகவும், மேன்மைக்காகவும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பரிந்து செயலாற்றுவது. இது தேசிய சமூகப்பணியாளர் அமைப்பு (NASW) குறித்துள்ள தொழில் நெறிமுறைகளில் சமூகப்பணியாளர்களுக்கான அடிப்படைப் பொறுப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது.. legislative advocacy என்றால் தங்களின் ஆதரவுக் குழுக்களின் நலனை முன்னிறுத்தி, தாங்கள் விரும்பும் வண்ணம் சட்டமன்ற நடவடிக்கையிலோ, ஒரு சட்ட வரைவையோ (மசோதா), சில ஷரத்துக்களை அறிமுகப்படுத்தியோ, அல்லது அதில் தேவையான திருத்தங்களைச் செய்யவோ, அதை சட்டமன்றத்தில் நிறைவேற்றவோ தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது கூட்டமைப்புகள் மேற்கொள்ளும் முயற்சி. இது சட்ட நுணுக்கங்களை உபயோகித்தோ அல்லது மக்களை ஒன்றுதிரட்டி எதிர்ப்போ ஆதராவோ தெரிவித்தோ சாதிக்க முற்படுவது
English
The process of influencing the course or content of a bill or other legislative measure. This may be facilitated by individuals, agencies, organizations, or coalitions to protect or establish the rights and entitlements of their clients. Legislative advocacy may occur directly by using specific legislative advocacy tactics or indirectly by mobilizing community groups.