legislative advocacy tactics
சட்ட ஆதரவிற்கான உத்திகள்
தமிழ் விளக்கம்
சட்டமன்ற நடவடிக்கைகளிலும், சட்டமியற்றலிலும் தலையிட்டு தேவையான சட்டங்களை அறிமுகப்படுத்தவோ, திருத்தங்கள் செய்யவோ, சட்டமியற்றுவதைத் தடுக்கவோ மேற்கொள்ளப்படும் முயற்சிகளைச் சட்டபூர்வமான ஆதரவு அல்லது எதிர்ப்பு உத்திகள் எனலாம். இதற்கென சமூகப்பணியாளர்கள், சட்டநடவடிக்கைக் குழுக்கள், சமூகக் குழுக்கள் மற்றும் தங்கள் நோக்கங்களை அடைய அரசியல் செல்வாக்கைப் (அரசியல் தரகர் - Lobbyist) பயன்படுத்துவோர் கையாளும் ஏழு உத்திகளை ரொனால்ட் மற்றும் ரினோ (Ronald B. Dear & Rino J. Patti) என்ற இரு சமூகப்பணிக் கல்வியாளர்கள் விளக்கி உள்ளனர். அவையாவன: 1. தாங்கள் விரும்பும் சட்ட வரைவை (மசோதா) சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு முன்பாகவே பரப்புரை செய்வது. 2. தனி நபர் மசோதாவாக அல்லாமல் பலஉறுப்பினர்கள் / பலநிறுவனங்கள் ஆதரவு தரும் மசோதாவாக அதை விரிவாக்கிக் கொள்வது 3. பெரும்பான்மை அல்லது ஆளும் கட்சியைச் சார்ந்த முக்கிய நபர் அந்த மசோதாவை ஆதரிக்கும் சூழ்நிலையை உருவாக்குவது 4. மசோதாவின் பேசுபொருள் தொடர்பான சட்டமன்ற குழு இருக்கும் பட்சத்தில் அக்குழுத் தலைவரை அந்த மசோதாவிற்கு ஆதரவு தரச் சம்மதிக்க வைத்து அவரைக் கொண்டே மசோதாவை அறிமுகம் செய்யவைப்பது 5. அந்த மசோதாவிற்கு யாரெல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கண்டறிந்து அவர்களின் எதிர்ப்பை நீர்த்துப் போக வைப்பது 6. அந்த மசோதாவிற்கு ஆதரவாகப் பொதுவிவாதத்தை உருவாக்கி அதன் முக்கியத்துவம் பற்றிப் பலரையும் பேசவைப்பது 7. அந்த மசோதாவில் தேவையான திருத்தங்கள் கோரப்பட்டால், அதைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வது. இதுதவிர அந்த மசோதாவின் பேசுபொருள் குறித்து தெளிவான விளக்கங்களையும், அந்த மசோதாவினால் ஏற்படும் செலவினங்களையும், அதனால் ஏற்படும் பயன்விளைவுகளையும் பலரும் புரிந்துகொள்ளும்படி ஏற்பாடு செய்வது. இது பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் பிற சட்டமன்ற உறுப்பினர்கள் என்று பலரும் ஆதரவு தர வழி வகுக்கும்.
English
Procedures used to influence lawmakers and the legislative process and to modify, pass, or defeat legislation. Seven specific procedures have been delineated by Ronald B. Dear and Rino J. Patti ("Legislative Advocacy: Seven Effective Tactics," Social Work, 26[July 1981], pp. 289- 296) to be used by advocates, staff, agencies, community groups, and lobbyists to influence state legislators: (1) introduce a bill as early as possible, preferably before the legislative session; (2) obtain multiple sponsorships and avoid solo sponsorship; (3) obtain bipartisan sponsorship with the prime sponsor in the majority party; (4) seek an influential prime sponsor, such as a committee chair, but only if that person will use available power to promote the bill; (5) obtain the support or neutralize the opposition of relevant state agencies and the governor; (6) press for open hearings and organize effective testimony; and (7) be ready to compromise and support the amendatory process to obtain a favorable outcome. Other activities to enhance the chances of a bill's passage are to define the problem that the bill addresses clearly; fully assess the fiscal impact of the bill's passage; provide clear, concise, and relevant information to committee members and staff; support the sponsors to help move the bill through the legislative process; mobilize constituencies; and use the media to publicize the problem and the legislative remedy.