Lenroot, Katharine F. (1891-1982)

லென்ரூத் கேதரின் (1891-1982)

தமிழ் விளக்கம்

லென்ரூத் கேதரின் (1891-1982) - அமெரிக்க அரசின் குழந்தைகளுக்கான செயலகத்தின் நீண்டகாலம் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். இளங்குற்றவாளிகள், குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்சனைகளை முன்னெடுத்ததிலும், சிறார் நலன், பள்ளி சுகாதாரச் சேவைகள் போன்ற பல செயல்பாடுகளில் ஆர்வம் காட்டிச் செயல்பட்டவர். கிரேஸ் அபோட் என்ற பெண்மணி, பின்னர் குழந்தைகளுக்கான செயலகத்தின் இயக்குனராகச் செயல்பட்டு, குழந்தைகள் செயலகத்தின் பல பணிகளை மறுசீரமைப்பு செய்தார். பொருத்தமற்ற பல திட்டங்களை நிறுத்தியும், பல திட்டங்களைப் பிற அரசுத்துறைகளுக்கு பகிர்ந்தளித்தும் மாற்றங்கள் செய்தார்.
குழந்தைகளுக்கான செயலகம் - இச் செயலகம் 1912 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டைக் கடந்த நிறுவனம். அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மனித சேவைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களுக்கான நிர்வாகத்தின் கீழ் செயல்படுகின்றது. குழந்தைகள் நலனுக்கான திட்டமிடல், ஒருங்கிணைப்பு, மற்றும் தேசிய அளவிலான செயல்களை முன்னெடுத்தல் போன்ற பணிகளைச் செய்து வருகின்றது. அபோட், கிரேஸ் (1978-1939) குழந்தைகள் நலனுக்கான பல சட்டங்கள் உருவாக்க காரணமாயிருந்த சமூகப்பணிக் கல்வியாளர். குழந்தைகள் நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சனுக்கு ஆலோசகராக இருந்தவர். வெள்ளை மாளிகையில் முதன்முதலில் குழந்தைகள் சம்பந்தமான மாநாடு நடத்தியவர்.

English

A long-time leader of the U.S. Children's Bureau, she was an advocate especially in resolving problems of juvenile delinquency, child labor laws, child welfare, and school health services. She succeeded Grace Abbott as director of the bureau but saw its various programs and initiatives eliminated, dismantled, or placed within other government departments.