less developed countries (LDCs)
வளர்ச்சி குறைந்த நாடுகள்
தமிழ் விளக்கம்
ஐக்கிய நாடுகள் சபை வரையறுத்து வைத்திருக்கும் வளர்ச்சிக் குறியீடுகளின் படி குறைவான பொருளாதார வளர்ச்சி, குறைவான தனிநபர் வருமானம், குறைவான கல்வியறிவு, ஊட்டச் சத்துக் குறைபாடு, குறைவான ஆயுட்காலம், வேளாண்மை சார்பு, பொருளாதாரப் பாதுகாப்பின்மை போன்ற விசயங்களில் போதிய முன்னேற்றமில்லாத நாடுகளை வளர்ச்சி குறைந்த நாடுகள் என்று பட்டியலிடுகின்றனர்.
வளர்ச்சி குறைந்த, வளர்ந்துவரும், எனப்படுபவை குறிப்பிட்ட சில வளர்ச்சிக் குறியீடுகளின்படி குறைந்த வளர்ச்சித் தரத்தைக் காட்டும் நாடுகளாகும். வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும், வளர்ச்சி குறைந்த நாடுகள் என்பவற்றை வேறுபடுத்திக் காட்ட உலகளவில் ஒரு தனியான பொருத்தமான வரைவிலக்கணம் அறியப்படாமல் இருப்பதனால், பலநாடுகளை எந்த நிலையில் வைப்பது என்பதைத் தீர்மானிக்க இயலவில்லை. காரணம் வளர்ந்துவரும் நாடுகள் என்று வகைப்படுத்தப்பட்ட சில நாடுகள், உயர் சராசரி வாழ்க்கைத் தரத்தை கொண்டுள்ளன. ஏனைய வளர்ந்துவரும் நாடுகளை விட மேம்பட்ட பொருளாதாரத்தைக் கொண்டிருப்பினும், முழுமையாக வளர்ந்த நாடுகளில் ஒன்று என்பதை எடுத்துக் காட்ட முடியாத நாடுகள். இந்த நாடுகள் newly industrialized nations என்ற புதிதாகத் தொழில் மயமாதலான நாடுகள் என்ற சொல்லால் அழைக்கப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளர் கோபி அன்னான் 'வளர்ந்த நாடு என்பது தன் நாட்டு மக்கள் அனைவரும், சுதந்திரமான வளமான ஒரு வாழ்க்கையை வாழக் கூடிய பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நாடாகும்' என்று வளர்ச்சிக்கு வரைவிலக்கணம் கூறினார். 'ஆனால் ஐக்கிய நாடுகள் அவையின் புள்ளிவிபரவியல் பிரிவானது வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகளை வேறுபடுத்திக் காட்டும் சரியான வரைமுறையைக் கொண்டிருக்கவில்லை. மேலும் இவ்வகையான வளரும் நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் என்ற பிரிவானது புள்ளியியல் விபரங்களை இலகுவாக்கவேயன்றி, ஒரு நாடானது தனது வளர்ச்சி நோக்கிய பாதையில் என்ன நிலையில் உள்ளதென்பதைத் தீர்மானமாக நிச்சயித்துக் கூறுவதாக அமைய வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றது.

English
The poorest nations on earth, including those with fewest natural resources and lowest level of education among the population. The United Nations term for such nations is "least developing countries." See also Fourth World.