less eligibility principle

தேர்வு பெறுவதற்கான தகுதிகளைக் குறைத்தல் அல்லது கடுமையாக்குதால், சலுகைகளைக் குறைத்தல்

தமிழ் விளக்கம்

இங்கிலாந்தின் வறியவர் சட்டத்தில், ஏழைகளுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவி (பொருளுதவி), குறைந்த ஊதியம் பெற்று வாழும் தொழிலாளர்களின் வருமானத்தைவிடக் குறைவாக இருக்கவேண்டும் என்ற கருத்தாக்கம். வறியவர்களுக்கான வேலைக்கூடங்களில் (workhouses) கொடுக்கப்படும் நிவாரணம் அல்லது வாழ்நிலை, குறைந்த ஊதியம் பெரும் தொழிலாளர்களின் வாழ்நிலையை விடக் குறைவாக இருக்கவேண்டுமென்ற நிலைப்பாடு. அப்படி இருந்தால்தான் வறியவர்களுக்கான நிவாரணம் பெறத் தயங்குவார்கள் என்ற அனுமானம். இந்த நிலைப்பாடு வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்திற்குப் பொருந்தாது.

English

The premise that poor people should not be given financial assistance that raises them to a level exceeding that of the lowest paid employed person in the community.