lethality

இறப்பு ஏற்படுத்தும், உயிர்போக்கடிக்கத்தக்க, கொல்லுகிற, சாகடிக்கின்ற

தமிழ் விளக்கம்

இந்த வார்த்தை உயிரைப் போக்கக்கூடிய தன்மையுடைய மனநிலை, மனிதர்கள், நிகழ்வுகள் அல்லது பொருட்களைக் குறிக்கும். சமூகப்பணியாளர்கள் தற்கொலை எண்ணம் கொண்டவர்களையும், கொலைவெறி கொண்டலைபவர்களையும் இந்த வகைப்பாட்டில் சேர்ப்பதுண்டு. மன அழுத்தத்தாலோ, நம்பிக்கை இழப்பதாலோ, அன்புக்குரியவரின் திடீர் மரணத்தாலோ, தீராத நோயாலோ, ஆதரவளித்து வந்தவர்கள் விலகிச் செல்வதாலோ ஏற்படும் தற்கொலை எண்ணத்தை, மரணம் ஏற்படுத்தும் காரணியாகக் கொள்ளலாம்

English

The degree to which someone or something is capable of causing death. Social workers primarily apply the term to clients who are suicide or homicide risks. For example, a client might be said to have a high degree of suicidal lethality if symptoms include feelings of depression and hopelessness, the recent loss of loved ones, development of a suicide plan, failing health, and deprivation of a supportive family or friends.