leukemia

இரத்தப் புற்றுநோய்

தமிழ் விளக்கம்

லுகேமியா என்ற சொல்லுக்கு வெள்ளை ரத்தம் என்று பொருள். இரத்தப்புற்று நோயாளிகள் இரத்தத்தில் அதிகமான அளவில் வெள்ளை அணுக்களைக் கொண்டிருப்பதால் இந்நோய் இப்பெயர் பெற்றது. இரத்தப் புற்றுநோய் அல்லது லுகேமியா (Leukemia), இரத்த வெள்ளை அணுக்களில் அல்லது எலும்பு மஜ்ஜையில் உருவாகி, இரத்த வெள்ளையணுக்களின் (White blood cells), அசாதாரணமான பெருக்கத்தால் அறியப்படுகிறது. லுகேமியா என்பது குறிப்பிட்ட சில நோய்களை ஒன்றிணைத்து வழங்கப்படும் பொதுப் பெயராக உள்ளது. இது எலும்பு மஜ்ஜையில் சாதாரணமாக இருக்கும் எலும்பு மஜ்ஜை அணுக்களை அகற்றி அவற்றின் இடத்தில் முதிராத வெள்ளை அணுக்களை நிரப்புவதால், எலும்பு மஜ்ஜை சேதமடைகிறது. இதனால் ரத்தம் உறைவதற்குத் தேவையான ரத்த வட்டுக்கள் குறைகின்றன. இரத்தப்புற்று நோய், சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியைப் பாதிப்பதால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வெகுவாகக் குறைத்து பல தொற்று நோய்களுக்கு வழிவகுக்கிறது.

English

Cancer of the blood-producing tissues-including bone marrow, lymphatics, liver, and spleen-resulting in increased production of white cells and a commensurate reduction of red cells and other blood elements. The onset of leukemia can occur at any age.