liability insurance
பொறுப்புக் காப்பீடு
தமிழ் விளக்கம்
பொறுப்புக் காப்பீடு என்பது யாரோருவர் தன்னுடைய செயல்களால் பாதிக்கப்பட்டு அதற்காக இழப்பீடு கேட்க முனைவார்கள் என்று ஐயுறுகிராறோ அவர் எடுத்துக்கொள்ளும் பொறுப்புக் காப்பீடு. உ.ம் வாகனக்காப்பீடு. உதாரணமாக வீட்டு சொந்தக்காரர் அல்லது ஒரு தொழிலகம் எடுத்துக்கொள்ளும் காப்பீடு பாலிசி (premises liability), வீட்டிலோ அல்லது தொழிலகத்திலோ யாரோ ஒருவர் கீழே விழுந்ததினால் உண்டான இழப்பிற்காக ஈடு கேட்கும்போது, காப்பீடு செய்தவருக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் உள்ளது. வாகனக் காப்பீடும் ஒரு விதத்தில் பொறுப்புக் காப்பீடுதான். வாகனம் மோதியதால் விபத்துக்குள்ளானவரின் ஆரோக்கியம், உடமை சேதாரம், உயிரிழப்பு போன்ற இழப்பீடுகளுக்கு பொறுப்பு ஏற்கிறது. பொறுப்புக் காப்பீட்டால் தரப்படும் காப்பீடு இரண்டு வகைப்பட்டது. பாலிசிதாரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும்போது அவர் சார்பில் வழக்காடுவது, பாதுகாப்பு அளிப்பது. எடுத்துக்காட்டாக மருத்துவரின் அஜாக்கிரதையால், தான் பாதிக்கப்பட்டதாக சிகிச்சை பெறுபவர் குற்றம் சாட்டி வழக்குத் தொடரும் பட்சத்தில் மருத்துவருக்கு ஆதரவாக காப்பீடு நிறுவனங்கள் வழக்காடும். வழக்கு நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் முடிவுக்கு வரும்பொழுது, நீதிமன்றம் உத்தரவிடும் இழப்பீட்டை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கும். பொறுப்புக் காப்பீட்டுப் பாலிசிகள் தன்னையறியாமல் செய்யும் தவறுகளுக்காகவே வழங்கப்படுகிறது. மற்றபடி விரும்பியோ அல்லது உள்நோக்கத்துடன் காபபீடு செய்தவர் தவறிழைக்கும் பட்சம் ஏற்படும் விளைவுகளுக்கு காப்பீடு வழங்கப்படுவதில்லை. பொறுப்புக் காப்பீட்டில் பலவகை உண்டு 1. தொழில் திறமைக்கான பொறுப்புக் காப்பீடு / தொழில் காப்பீடு (professional indeminity insurance) தனியாகத் தொழில் செய்யும் மருத்துவர்களும், சமூகப்பணியாளர்களும் இக்காப்பீடு எடுத்துக்கொள்வர். 2. வளாகக் காப்பீடு (premises liability) ஒரு வளாகத்திற்குள் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் காப்பீடு 3. நிறுவனக் காப்பீடு (agency liability) ஒரு நிறுவனத்தின் பணியாளர்களால் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழும்போது நிறுவனமே பணியாளர் சார்பில் இழப்பீடு வழங்கச் செய்யப்படும் காப்பீடு. இது தவிர இயக்குனர் மற்றும் அதிகாரிகள் (shielding board members and executives) பொறுப்புக் காப்பீடு, சுற்றுச் சூழல் பொறுப்புக் காப்பீடு, தவறுகள் மற்றும் விட்டு விடுதலுக்கான (errors and omissions protection) காப்பீடு போன்று பலவகைகள் உண்டு.
English
A plan to protect one from the financial risks of a lawsuit. For professionals it is an important protection against claims of violations of professional conduct. Other important liability insurance plans include premises liability (covering accidents at sites where the service is performed), agency liability (covering all agency personnel, consultants, and volunteers), errors and omissions protection (shielding board members and executives), and fidelity bonding (covering those with financial authority).