libel
பழிப்புரை, புகழியுரை, (அவதூறு), பொய்யான இகழுரை, எழுத்து வழி அவதூறு, நற்பெயருக்குக் கேடுண்டாகும்படி வெளியிடப்பட்ட அறிவிப்பு, நற்பெயர் கெடுக்கத்தக்க செய்தி வெளியீடு, நிந்தித்து வெளியிடும் துண்டறிக்கை
தமிழ் விளக்கம்
ஒரு மனிதரின் மீதோ அல்லது ஒரு தொழிலின் மீதோ, நிறுவனத்தின் மீதோ, வியாபாரத்தின் மீதோ நற்பெயருக்குக் களங்கம் உண்டாகும்படிக்கோ, பொது மக்களின் அபிமானத்தைச் சீர்குலைக்கும் படிக்கோ, கேலிப் பொருளாகும்படிக்கோ, உண்மையல்லாத செய்திகளை எழுத்து மூலமாகப் பத்திரிகைகளிலோ, துண்டறிக்கை மூலமோ, படங்கள் மூலமோ, குறியீடுகள் மூலமோ, கேலிச் சித்திர வடிவிலோ வெளியிடுவது.
English
Writing and publishing a statement that is untrue, misleading, malicious, and damaging to the person being written about. To win a lawsuit against a libel charge, an individual must prove that the statements were either true or nonmalicious and undamaging. See also slander.