liberal arts education

மனதை விரிவாக்கும் கலைக்கல்வி, தாராளவாதக் கலைக்கல்வி, முற்போக்கு சிந்தனை வளர்க்கும் கல்வி

தமிழ் விளக்கம்

தாராளவாத அல்லது முற்போக்கு சிந்தனைகளை வளர்க்கும் அல்லது மனதை விரிவாக்கும் கல்விமுறையென்பது, கடந்த கால கிரேக்கச் சிந்தனையில் சுதந்திரமாகச் சிந்திப்பதற்கு, பொதுவிவாதங்களில் பங்கெடுப்பதற்கு, அறங்கூராயத்தில் (பஞ்சாயத்து) உறுப்பினராக அமர்வதற்கு, நீதிமன்றத்தில் சுயமாக வாதிடுவதற்கு உதவும் கல்விமுறையாகக் கருதப்பட்டது. தற்காலத்திலும் தங்களையும், தாங்கள் வாழும் உலகத்தையும் புரிந்துகொள்ள அடித்தளமமைக்கும் பாடங்களான மொழிப்பாடம், தத்துவம், தர்க்கம், கணிதம், சமூகவியல், உளவியல், பொருளாதாரம், மானுடவியல், அடிப்படை அறிவியல் போன்ற பாடங்களை இளநிலைப் பட்ட கல்வியில் பயிற்றுவிக்கும் கல்வியை இப்பெயரிட்டு அழைக்கிறார்கள். இக்கலைப்படிப்பு மற்ற தொழில் சார் (தொழில் கல்வி, பொறியியல் கல்வி, மருத்துவக் கல்வி) கல்வியிலிருந்து வேறுபட்டது. சமூகப்பணியில் உயர் கல்வி கற்க விரும்புவார்கள் இந்த மாதிரியான கலைக் கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டியது அடிப்படைத் தகுதியாக ஆக்கப்பட்டுள்ளது.

English

Undergraduate education designed to give students a foundation of knowledge that equips them to make free, informed choices about themselves and the world in which they live. Liberal arts education is distinguished from vocational training or professional or technical education. Originally, the liberal arts consisted of language, logic, rhetoric, arithmetic, geometry, astronomy, and harmony but now are studies of the natural sciences, social sciences, and humanities. One requirement for admission to accredited graduate schools in social work in the United States is a degree signifying liberal arts education.