liberalism
தாராண்மையியம்
தமிழ் விளக்கம்
தாராண்மையியம் (Liberalism) என்பது, தனிப்பட்டவர்களது சுதந்திரத்தை மிகவும் முக்கியமான அரசியல் இலக்காகக் கொண்ட அரசுகளின் அடிப்படையான கொள்கையாகும். இக்கொள்கை பரந்துபட்ட எண்ணக் கருக்களையும், கோட்பாடுகளையும் தன்னுள் அடக்கியுள்ளது. தனிப்பட்டவர்களது சுதந்திரம் தாராண்மையியக் கொள்கைகளின் அடிப்படையாக இருப்பினும், பொருளியல் அடிப்படையில் நல்ல நிலையில் உள்ளவர்கள் தமது வருமானத்தின் ஒரு பகுதியை அரசுக்குக் கொடுக்க வேண்டியது கடமையாகக் கருதப்படுகிறது. தாராண்மையியத்தின் மூலம் அறிவொளிக் காலத்தில் [Age of Enlightenment] உருவாகி தொடர்ந்து வருகிறது. அரசர்களின் கடவுளுக்கு ஈடான உரிமை, தலைமுறை உரிமை, அரசு மதம், காப்பாண்மையியம் (protectionism) போன்ற முன்னைய அரசுக் கோட்பாடுகளின் அடிப்படை எடுகோள்கள் பலவற்றைத் தாராண்மையியம் ஏற்க மறுத்தது. பதினாறாம் நூற்றாண்டுவரை ஐரோப்பாவில் இருந்து வந்த இரண்டு மையக்கருத்தோட்டங்களான பிறப்பிலேயே மன்னர்களுக்கும் பிரபுக்களுக்கும் மண்ணையும் மக்களையும் ஆளும் ‘புனித உரிமை’கள் (Divine Right) உள்ளன என்பதற்கும், இரண்டு, ஒரு மதநம்பிக்கையாளனின் ஆத்மா தேவாலயத்துக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற கருத்துக்கு மறுப்பாகவும் உருவானதே தாரான்மை வாதம். தனிமனிதன் சுதந்திரமான ஆன்மீகத்தேடலுக்கும், தன் ஆளுமையை முழுமை செய்து கொள்ளுதலுக்கும் உரிமை கொண்டவன் என்றும், ஒவ்வொரு தனிமனிதனும் கரணிய ஞானம் (Reason) கொண்டவன், அவனது செயல்களுக்கு அதன் மூலம் அவனே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தாரான்மைவாதம் சொன்னது. சமூகம் என்பது சுதந்திரமான தனிமனிதர்களால் ஆனதாக இருக்கவேண்டும், அரசு அவர்களின் கரணியஞானத்தின் மலர்தலுக்கு இடமளிப்பதாக இருக்கவேண்டும் என்றது. ஆடம் சிமித் என்பவராலும் பிறராலும் முதன் முதலில் உருவாக்கப்பட்ட பொருளியல் தாராண்மையியம், அமைதிக்கும், வளத்துக்குமான சிறந்த வழியாக கட்டற்ற சந்தை, கட்டற்ற வணிகம் என்பவற்றை ஏற்றுக்கொண்டது. தனியார் சொத்துரிமையும், தனிப்பட்ட ஒப்பந்தங்களுமே பொருளியல் தாராண்மையியத்தின் அடிப்படைகள். பண்பாட்டுத் தாராண்மையியம் என்பது, பாலியல் சுதந்திரம், மத சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், தனிப்பட்ட வாழ்வில் அரசின் தலையீட்டிலிருந்து பாதுகாப்பு என்பவை உள்ளிட்ட தனியார் சுதந்திரங்ளில் அக்கறை கொண்டுள்ளது. வெவ்வேறு வடிவங்களிலான தாராண்மையியங்கள் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருப்பினும், பல அடிப்படையான கொள்கைகளில் அவை ஒன்றுபட்டுள்ளன. சிந்தனைச் சுதந்திரமும் பேச்சுச் சுதந்திரமும், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரமாக எண்ணங்களைப் பகிர்தல், தனியார் சொத்துரிமை, கட்டற்ற சந்தை, வெளிப்படையான அரசு முறைமை என்பன இவற்றுள் அடங்குவன.
English
The sociopolitical orientation that currently emphasizes the development of opportunities for all people, especially those who are disadvantaged, poor, elderly, children, and racial or ethnic minorities, through economic, educational, and social programs that are principally financed, regulated, and administered by the government. Use of this term, as well as that of conservatism, has accurate meaning only in the context and time frame in which it is used. This is because the orientation and goals of liberalism have changed through the centuries (see classical liberalism), have been associated with many political movements along the way (see leftist), and may be about to change once again (see neoliberalism).