libertarianism
ஊழ்க்கோட்பாட்டை எதிர்ப்பவர், தன்விருப்பார்ந்த வினையாட்சிக் கோட்பாட்டாளர், விடுதலை ஆதரவுக் கோட்பாட்டாளர், கட்டுப்பாட்டின்மையை ஆதரிப்பவர், சுதந்திரவாதம்
தமிழ் விளக்கம்
சுதந்திரவாதம் அல்லது தாராண்மியவாதம் (Libertarianism) ஒர் அரசியல் பொருளாதாரக் கொள்கை. இயன்றளவு அரசின் பங்கு குறைவாகவும், தனிமனித சுதந்திரம் விரிவாகவும் அமைய வேண்டும் என்பதே இந்தக் கொள்கையின் அடிப்படை. குறிப்பாக அரசின் வன்முறைக்கான அதிகாரத்தை இயன்றவரை கட்டுப்படுத்த இது பரிந்துரைக்கிறது. தனி மனிதனின் சுதந்திரம் இன்னொரு மனிதனைப் பாதிக்காத வகையில் முழுமையான சுதந்திரத்தை இந்தக் கொள்கை வேண்டுகிறது. எங்கே ஒரு மனிதனின் உரிமைகள் பாதிக்கப்படுகிறதோ, அதைப் பாதுகாக்க மட்டுமே, அரசுக்கு வன்முறைக்கான அதிகாரம் உண்டு என்கிறது. எடுத்துக்காட்டாக, விபச்சாரம், ஆபாசம் போன்றவை மற்ற மனிதர்களை நேரடியாகப் பாதிப்பதில்லை, எனவே அவற்றை குற்றவியல் செயல்களாகக் கருதக் கூடாது என்று இது வலியுறுத்துகிறது. இக்கோட்பாடு தனிமனித்தத்துவம், தனிமனித உரிமைகள், வலிந்து தாக்காமைக் கொள்கை (Non-aggression principle), திறந்த சந்தை, தனியார் சொத்துரிமை, வரம்புக்குட்பட்ட அரசு போன்ற கருத்துக்களை வலியுறுத்துகிறது
English
The sociopolitical philosophy and movement that advocates for minimal government and each individual's absolute rights over his or her own person and property as long as it does not interfere with the equal rights of others. The movement is centered in the Libertarian Party, founded in 1971, whose candidates for most public offices advocate the gradual elimination of all taxes and an end to government regulation of all personal matters.