Licensed Clinical Social Worker (LCSW)
உரிமம் பெற்ற மருத்துவ சமூகப்பணியாளர் (LCSW)
தமிழ் விளக்கம்
மருத்துவ சமூகப்பணியாளராக பணியாற்ற சம்பந்தப்பட்ட மாநில (அமெரிக்காவில்) அரசுகளிடமிருந்து சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றவர். ஒருவரின் பெயருக்கு பின்னால் குறிக்கப்பட்ட LCSW என்ற குறியீடு, அவர் போதுமான கல்வித்தகுதியும், தொழில் திறனுமுடையவர் என்பதற்கான அரசு வழங்கும் அத்தாட்சி. இந்த அங்கீகார உரிமம் பெற சமூகப்பணியில் முதுகலைப் பட்டமும், அனுபவஸ்தர்களின் மேற்பார்வையில் குறிப்பட்ட காலம் பணி புரிந்திருத்தலும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் நடத்தும் தேர்வில் தேர்வு பெற்றிருத்தலும் அவசியம்.
English
A professional social worker who has been legally accredited by a state government to engage in clinical social work in that state. The initials LCSW after a professional's name indicate possession of the license and the relevant qualifications. Qualifications for the license vary from state to state. Many states require an MS W degree from an accredited graduate school, several years of supervised professional experience, and successful completion of the state's social work licensing exam. Information about these requirements can be obtained from the relevant state's board of professional licensing, listed in the appendix of this dictionary.