Licensed Independent Clinical Social Worker (LICSW)

உரிமம் பெற்ற சுதந்திர (சுயாதீன) மருத்துவ சமூக பணியாளர் (LICSW)

தமிழ் விளக்கம்

அமெரிக்காவில் தொழில்சார் உரிமங்கள் வழங்கும் அமைப்புகளும், காப்பீட்டு நிறுவனங்களும், நிறுவனச் சார்பற்று சுயாதீனமாக தொழில் செய்ய உரிமம் வழங்குகின்றன. இவர்கள் சமூகசேவை நிறுவனங்களிலோ அல்லது அரசின் சமூக நலத் திட்டங்களிலோ அல்லது மருத்துவமனைகளிலோ பணியாற்றாமல், சுயாதீனமாகப் பணியாற்றும் சமூக சேவகர்கள். இவர்களிடம் ஆலோசனை பெறவோ, சிகிச்சை பெறவோ யாருடைய பரிந்துரையும் தேவைப்படுவதில்லை. தொழில் திறனும், தொழில் நெறியும் கொண்ட இவர்களுக்கு யாருடைய கண்காணிப்பும் தேவை இல்லை. ஆகையால், காப்பீடு நிறுவனங்கள் இவர்களிடம் சிகிச்சை பெரும் வாடிக்கையாளருக்கான சேவைக் கட்டணத்தை திரும்பத் தருகின்றது. சமூகபணிக்காக தாங்களே ஒரு அமைப்பை ஏற்படுத்திச் செயல்படும் சமூகப்பணியாளர்களும் இதில் அடங்குவர்.

English

A designation used by some state professional licensing bodies and some third-party financing institutions to indicate that the practitioner is qualified for independent practice. The designation is sometimes used for social workers who have been granted the status of an independent vendor, requiring neither referral nor supervision as a condition of third-party payment. See also independent social work.