licensing board
உரிமம் வழங்கும் ஆணையம்
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட அதிகாரப் பரப்பிற்குள் ஒரு தொழிலையோ அல்லது தொழில்நுட்பப் பணியையோ செய்ய அனுமதி வழங்கும் அமைப்பு. இந்த அமைப்புகள் பெரும்பாலும் அத் தொழில் சார்ந்த நிபுணர்களையும், அத்தொழிலைப் பயன்படுத்தும் அல்லது அத்தொழிலில் ஆர்வமுள்ள பிரதிநிதிகளையும் கொண்டு அரசால் அமைக்கப்படும். சமூகப்பணிக்கு உரிமம் வழங்கும் அமைப்புகள், உரிமம் வழங்குவது தொடர்பான தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளுதல், தகுதிகளைச் சரிபார்த்தல், போதிய கால இடைவெளியில் உரிமத்தைப் புதுப்பித்தல், உரிம விதிகளை மீறாதிருக்கக் கண்காணித்தல், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளைச் செய்யும்.
English
An official organization that regulates a professional or technical practice in a specific jurisdiction. State licensing boards are usually comprised of a combination of professional and public members appointed by the governor. Social work licensing boards usually regulate social work practice through formal licensing examinations, issuing licenses to practice, overseeing license renewals, and disciplining social workers who have violated the law or its rules and regulations.