licensing examination
உரிமம் பெறுவதற்கான தேர்வு
தமிழ் விளக்கம்
ஒரு தொழில் செய்ய உரிமம் வழங்க சம்ந்தப்பட்ட உரிமம் வழங்கும் ஆணையம் நடத்தும் முறையான தேர்வு. எடுத்துக்காட்டாக, சமூகப்பணியாளர்களுக்கு வழங்கப்படும் உரிமம் பல நிலைகளைக் கொண்டது. கல்வித்தகுதி, பணி அனுபவம், போன்றவற்றை கருத்தில் கொண்டு வெவ்வேறு விதமான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகள் அமெரிக்கவின் அனைத்து மாநிலங்களிலுள்ள சமூகப்பணியாளர்களின் உரிமம் வழங்கும் கூட்டமைப்பு பரிந்துரைக்கின்ற புறநிலைத் (objective) தேர்வுகளாக இருக்கும். இத்தேர்வுகள் பெரும்பாலும் தேர்வு எழுதுபவர்கள், மதிப்பீடு செய்பவர்களின் கருத்துகளைக் கடந்து புறநிலை உண்மைகளைச் சோதித்தறியப் பயன்படுபவை.
English
The formal test a profession's licensing board requires for a professional to become licensed in that state. Most states license social workers at multiple levels according to education and professional experience earned and employ different examinations for each level. The licensing examinations used by states are objective tests developed by the American Association of State Social Work Boards (AASSWB) and are designed to measure minimal competence.