lie detector

பொய் நிரூபமானி, பொய்யறி கருவி

தமிழ் விளக்கம்

பொய் சொல்வதென்பது குற்றவுணர்வோடு சம்பந்தப்பட்டதால், அது தன்னாட்சி நரம்பு மண்டலத்தைத் தூண்டி, இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாசம், தோலின் ஈரப்பதம் போன்றவற்றைப் பாதிக்கின்றது. இதில் ஏற்படும் மாற்றங்களை, கருவிகளைக் கொண்டு அளவிடுவதன் மூலம் விசாரணைக்குட்பட்ட ஒருவர் பொய் சொல்லுகிறாரா அல்லது உண்மை சொல்லுகிறாரா என்பதை அறிய முடியும் என்ற அனுமானத்தின் பேரில், காவல் துறையும், பிற விசாரணை அமைப்புகளும் பொய்யறி கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து பெறப்பட்ட முடிவுகள் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் கூட, விசாரணை அமைப்புகளுக்கு குற்றவாளிகளின் பதிலைக்கொண்டு எத்திசையில் மேற்கொண்டு விசாரணையை நடத்தவேண்டும், எந்தெந்தக் கோணங்களில் விசாரணையை மேற்கொள்ளவேண்டும் என்பதை அறிய உதவுவதால், பொய் நிரூபமானி அல்லது பொய்யறி கருவிகளைப் பரவலாகப் பயன்படுத்துகின்றனர்.

English

A machine used in police and other investigations to record physiological rates of change in pulse, blood pressure, skin moisture, and respiration. The subject answers questions, and the physiological rates of changes are recorded for expert analysis. Answering a question falsely is said to be emotionally charged for most people and stimulates the autonomic nervous system (ANS) over which one has no control. Because accuracy is possible in about 75 percent of those tested, the machine is used more to help in the investigation process than as evidence in courts of law.