life adjustment groups

வாழ்க்கையைச் சீர்படுத்தும் / ஒழுங்காக்கும் / நல்லிணக்கப்படுத்தும் குழுக்கள்

தமிழ் விளக்கம்

வளர்ச்சி ரீதியாலோ, நோயினாலோ அல்லது தீர்க்கமுடியாத இயலாமையினாலோ நீண்ட காலமாக அவதியுறும் உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு, அப்பிரச்சனைகளை எப்படிக் கையாள்வது அல்லது ஏற்றுக்கொண்டு இயல்பாவது என்பதைக் கற்றுத்தரும் குழுக்கள். குடும்பக்கல்வி நடைமுறையைப் போன்றே ஒரு நிபுணர் தலைமையில், ஐந்து முதல் 12 உறுப்பினர்களைக்கொண்ட குழு, வரையறுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பிரச்சனையின் தன்மையைப் பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், அதைக் கையாளும் நடைமுறைகள் பற்றியும், பரஸ்பர ஆதரவின் அத்தியாவசியம் பற்றியும் எடுத்துக்கூறி வாழ்க்கையைச் சீர்படுத்தும் / ஒழுங்காக்கும் / நல்லிணக்கப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வர். தலைக்காயத்தால் உணர்விழந்தவர்களுள்ள, இயலாமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுள்ள, முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய் அல்லது மூளையசதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இது மாதிரியான ஒழுங்காக்கும் / நல்லிணக்கப்படுத்தும் கல்விப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

English

Educationally oriented groups for people who face some chronic condition (that is, irreversible medical or developmental disability) or their families. Similar to a family life education (FLE) program with a professional leader and six to 12 members for time-limited sessions, these groups provide information about the condition, advice for dealing with its consequences, and mutual support. Those using such groups have included families of people with head injuries, people with multiple sclerosis, parents of children with specific disabilities, and families of Alzheimer's patients.