life model

உயிராற்றல் மாதிரி / வாழ்க்கை முன்னுதாரணம்

தமிழ் விளக்கம்

சமூகப்பணியில், ஒரு வாடிக்கையாளருக்கும் (அவரது பிரச்சனை) அவரது சுற்றுப்புறத்திற்கும் உள்ள தொடர்பை விளக்க, சூழலுக்கும் மனிதருக்கும் ஏற்படும் பரஸ்பரத் தாக்கங்களை உருவகமாக்கி (metaphor), (உயிர்ச்) சூழலியலில் சொல்லப்படும் கண்ணோட்டங்களோடு ஒப்பிட்டு விளக்குவதுண்டு. சூழலியல் கண்ணோட்டத்தைப் பின்பற்றும் சமூகப்பணியாளர்கள், ஒரு மனிதனுக்கும் அவனது சுற்றுப்புறத்திற்கும் இடையில் நிகழும் தொடர்பாலும், பரிமாற்றங்களாலுமே, மனிதனுக்கு மன அழுத்தம் உருவாகி, அவனது வாழ்க்கைப் போக்கிலும், மனிதர்களுக்கிடையேயான உறவு முறைகளிலும் தாக்கமேற்படுத்தி, வளர்ச்சிக்கான தடைகளை உருவாக்குவதாகக் கருதுகின்றார்கள். இந்த உயிராற்றல் மாதிரி / வாழ்க்கை முன்னுதாரண அணுகுமுறையைப் பின்பற்றும், கார்ல் பெய்லி மற்றும் அலெக்ஸ் கிட்டேர்மன் (Carel Bailey Germain and Alex Gitterman) போன்ற சமூகப்பணியாளர்கள், மனிதர்களிடமும், குழுக்களிடமும் வளர்ச்சிக்கு உதவும் திறன்களை வெளிக்கொண்டுவந்து, வளர்ச்சியை ஊக்குவிக்கும் தொடர்புகளை மீட்டெடுக்க சுற்றுச் சூழல் தரும் அழுத்தங்களைப் புரிந்து கொண்டு அதைக் குறைக்க வேண்டுமென்று கருதுகின்றனர்.
நிகழ்ந்துகொண்டிருக்கும் மானுட வாழ்வென்பது தனித்த நிகழ்வாக இருக்க முடியாதென்றும், ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையும் பிறர் வாழ்க்கையுடன் பிணைந்துள்ளதென்றும், மானுட வாழ்க்கை ஒட்டுமொத்தமாக மழையுடனும் வெயிலுடனும் காற்றுடனும் கலந்துள்ளதென்றும், இங்குள்ள உயிர்குலத்தின் வாழ்வுடன் அது இணைந்துள்ளதென்றும், அது தனிமனித வாழ்வில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதால் அதைப் புரிந்து கொண்டு கையாளப்படவேண்டுமென்பது இவர்களின் அணுகுமுறை.

English

The social work practice approach that uses the ecological perspective as a metaphor for focusing on the interface between the client and the environment. The social worker who uses this approach views stressful problems in living (life transitions, interpersonal processes, environmental obstacles) as consequences of person-environment transactions. According to Carel Bailey Germain and Alex Gitterman (The Life Model of Social Work Practice, New York: Columbia University Press, 1980, p. 5), the approach uses an integrated method of practice with individuals and groups to release potential capacities, reduce environmental stressors, and restore growth-promoting transactions.