life review
வாழ்க்கையை (மறு) பரிசீலனை செய்தல்
தமிழ் விளக்கம்
வாழ்வின் அந்திம காலத்தில் அதுவரை வாழ்ந்த வாழ்வைப் பகுத்தாய்ந்து, அதன் உட்பொருளறிந்து, வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள செய்யப்படும் முயற்சி. இது முதுமைப்பருவத்தில், குறிப்பாக மரணத்தை நெருங்கிக் கொண்டிருப்பவர்களிடம் ஏற்படும் இயல்பான சிந்தனையோட்டம். கடந்த காலத்தில் தீர்க்கப்படாத குழப்பங்கள், முரண்பாடுகளை நினைவிற்குக் கொண்டுவந்து, அதை தீர்க்க முயலுதல். அப்படி முயலும்போது அது மன அமைதிக்கு வழிவகுக்கும். இதையே ஒரு சிகிச்சையாளர் மூலமாகச் செய்கையில், அவருடைய கேள்விகளும், அதற்களிக்கப்படும் பதில்கள் மற்றும் விளக்கங்கள் இன்னும் தெளிவைக் கொடுக்கும். இருத்தலியல் சமூகப்பணி அணுகுமுறையைக் கையாள்பவர்களுக்கு வாழ்க்கையைப் பரிசீலிக்க உதவுவதென்பது ஒரு முக்கியமான அணுகுமுறை.
English
The process of looking back over one's own life, analyzing it, uncovering the hidden themes, and understanding the meaning of the life. This occurs naturally among most older people, especially those approaching death. Conflicts that were unresolved during earlier years are addressed and dealt with. Reintegration occurs as conflicts are resolved. For some people, the life review process is effective and helpful when a therapist facilitates it through a systematic questioning and listening process. This life review therapy has been an important part of existential social work.