life script

வாழ்க்கை வசனம்

தமிழ் விளக்கம்

வாழ்க்கை வசனம் என்பது ஒரு நாடக வசனம் போல, திரைப்பட வசனம் போல, ஒரு மனிதன் எப்படி நடந்துகொள்ள வேண்டும், என்ன பொறுப்புகளை (பாத்திரங்களை) ஏற்று நடிக்க வேண்டும், விருப்பு வெறுப்புகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும், மற்றவர்களுடன் எப்படித் தொடர்பு கொள்ள (பரிமாற்றங்கள் / பரிவர்த்தனைகள்) வேண்டும் என்பதைப் பற்றி ஆழ்மனத்தில் அனுபவ அடுக்குகளாக எழுதப்பட்ட வசனக் குறிப்புகள் என்று எரிக் பெர்ன் என்ற மன நல மருத்துவர் தனது பரிவர்த்தனைக் கோட்பாட்டில் (Transactional Analysis) விரித்துரைத்த விளக்கம். தியாகி (martyr), பாதிக்கப்பட்டவர் (Victim), காதலன்- காதலி (lover), தோல்வியுற்றவர் (failure), போஷிப்பவர் அல்லது புரவலர் (nurturer) போன்ற கருப்பொருட்களே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை வசனத்தில் பொதுவாகக் குறிக்கப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையின் வசனக்குறிப்பில் நான்கு விதமான பஞ்ச் வசனங்கள் முக்கியமானவை 1. நானும் சரி நீங்களும் சரி என்ற ஆரோக்கிய வசனம் (I'm OK-You're OK), 2. நான் சரி நீங்கள் சரியில்லை என்ற அகங்கார நிலை (I'm OK-You're not OK) 3. நான் சரியில்லை நீங்கள் சரி என்ற தாழ்வு மனப்பான்மை (I'm not OK-You're OK) 4. நானும் சரியில்லை நீங்களும் சரியில்லை என்ற கையறு நிலை (I'm not OK-You're not OK).

English

A concept originated by psychiatrist Eric Berne in the 1970s to describe a person's lifelong pattern of behavior, predominant roles, orientation regarding choices, and the manner of interacting (transacting) with others. Life scripts have themes (such as martyr, victim, lover, failure, or nurturer), which the person tends to act out regularly. Four general life scripts that Berne-popularizer Thomas Harris identified as guides to transactions are as follows: (1) I'm OK-You're OK, (2) I'm OK-You're not OK, (3) I'm not OK-You're OK, and (4) I'm not OK-You're not OK.