life skills

வாழ்க்கைத் திறன்கள்

தமிழ் விளக்கம்

மாறி வரும் சமூக எதிர்பார்ப்புகளுக்கேற்ப, அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளைக் கையாண்டு, குறிக்கோள்களை அடையவும், வாழ்க்கைத் தரத்தை மேம்பாடு அடையச் செய்யவும் முறையான பயிற்சியின் மூலமோ அல்லது அனுபவத்தின் மூலமோ கற்றுக்கொள்ளும் திறமைகள். வாழ்க்கையைப் புரிந்துகொண்டு சரியாக வாழவும், அன்றாட வேலைகளை முறையாகச் செய்யவும், வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களைக் கையாளவும், மற்றவர்களுடன் இணைந்து வாழவும் வாழ்க்கைத் திறன்கள் தேவை. இந்தத் திறன்கள் மூன்று வகைப்படும். 1. சமூகத் திறன்கள் (தன்னை அறிந்து கொள்ளுதல், பலன் தரும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுதல், நல்லுறவு பேணுதல், மற்றும் பிறர்நிலை உணர்தல்) 2. சிந்தனைத் திறன்கள் (படிப்பாற்றல் சிந்தனை, நுண்ணறிவுச் சிந்தனை, முடிவெடுத்தல், பிரச்சனையை தீர்த்தல்) 3. உணர்ச்சித் திறன்கள் (மன அழுத்தத்தைக் கையாளுதல், உணர்ச்சிகளைக் கையாளுதல்) இதுதான் வாழ்க்கைத் திறன்கள் என்று இறுதியாக ஒரு பட்டியலைப் பிரேரிக்க முடியாதென்றாலும், வாழ்க்கைத் திறன் பயிற்சியில் கீழேகண்ட திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 1.தன்னைத்தானே அறிதல், 2, தகவல் தொடர்பாற்றல், 3. பிறருடன் நல்லுறவு பேணுதல் 4. உணர்ச்சிகளைக் கையாளும் திறன் 5. பிறரைப் புரிந்து கொள்ளும் திறன் 6. ஆழ்ந்து சிந்திக்கும் திறன், 7. மாறுபட்டு சிந்திக்கும் திறன், 8. முடிவெடுக்கும் திறன், 9. பிரச்சனையைத் தீர்க்கும் திறன், 10. மன அழுத்த மேலாண்மை. மேலும் வாழ்க்கைத் திறன்கள் வயதிற்கேற்பவும், மனிதர்களின் இயலாமைக்கேற்பவும் (எ.கா.ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர், ஊனமுற்றோர்), இடம் சார்ந்தும், தொழில் சார்ந்தும் மாறுபடும் தன்மை கொண்டது.
.

English

The relative abilities to carry out activities of daily living (ADL), such as home management, budgeting, meal planning and preparation, home maintenance, personal hygiene, finding and maintaining appropriate educational and vocational opportunities, using the social system to obtain needed assistance, and maintaining positive social interactions. See also junior life skills.