limbic system

லிம்பிக் சிஸ்டம்

தமிழ் விளக்கம்

‘லிம்பிக் சிஸ்டம்’ என்பது ஒரு மினி மூளை. ஒன்றுக்குள் ஒன்று வளைந்த பகுதிகள் கொண்ட இங்குதான் உணர்ச்சிகள், ஞாபக சக்தி, கோபம் போன்ற எல்லாம் கவனித்துக் கொள்ளப்படுகிறது. இது உணர்ச்சிகளின் தலைநகரம். மூளையின் நடுத் தண்டுக்கு அருகே பார்த்தால், உள்ளுக்குள் ‘தலாமஸ்’ ‘ஹைப்போ தலாமஸ்’ பிட்யூட்டரி சுரப்பி, பினியல் சுரப்பி ஆகியவை இருக்கின்றன. தலாமஸுக்கும், மூளைத் தண்டுக்கும் இடையே ‘ஹைப்போதலாமஸ்’. சுமார் பதினான்கு கிராம் எடையுள்ள இந்தப் பகுதி, மூளையிலேயே ரொம்பத் துடியான பகுதி. இவை நம் உடல் உஷ்ணம், தாகம், பசி, ரத்த அழுத்தம், செக்ஸ், தாக்குதல், பயம், தூக்கம் ஆகிய அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றன. நம் வளர்ச்சி, ஆண் பெண் இன உறுப்புகள் சாப்பாட்டைச் சக்தியாக மாற்றுவது போன்றவை பிட்யூட்டரி சுரப்பியின் வேலைகள். மேலும் சிறுநீர் அளவு, தாய்ப்பால் சுரப்பி போன்றவற்றையும் பிட்யூட்டரி கட்டுப்படுத்துகிறது.

English

That part of the brain beneath the cortex that helps regulate longterm memory functions and emotions, especially rage, fear, and sexual arousal. The limbic system also is involved in the transmission of information between the brain and the body's peripheral sensory and motor systems.