limited beneficence

வரையறுக்கப்பட்ட நற்செய்கை / தரும தானம் / அறச்செயல்

தமிழ் விளக்கம்

சமூகப்பணியில் ஒரு வாடிக்கையாளருக்கு உதவி செய்வது அல்லது நலன் புரிவதென்பது, அவரைப் பிரச்சனையிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்ல, அவருக்குச் செய்யப்படும் உதவி அவருடைய பொருளாதாரம், ஆரோக்கியம், குடும்பச் சூழ்நிலைகளுக்குக் கட்டுப்பட்டதாகவும், ஏற்றதாகவும் இருக்கவேண்டுமென்றும், உதவியை வாடிக்கையாளரால் ஜீரணிக்க முடியவேண்டுமென்றும், அளிக்கப்பட்ட உதவி சுமையாக மாறிவிடலாகாது என்ற கருத்து. உதவி செய்வதால் சமூகப்பணியாளர்கள் பழிச் சொல்லுக்கு ஆளாகிவிடலாகாது என்ற நிலைப்பாடும் இதிலடங்கும்.

English

In social work practice, actions to enhance the wellbeing of others that are carefully circumscribed to protect clients from harm without interfering with their basic liberties (for example, important medical or financial decisions). See also beneficence and selective beneficence.