limousine liberal
உல்லாச ஊர்தியில் செல்லும் தாராளவாதிகள் / சமூக அக்கறையுள்ளவர்கள்
தமிழ் விளக்கம்
ஏழைகளுக்கு எப்படியெல்லாம் உதவ வேண்டும் என்று ஆலோசனைகள் சொல்லிவிட்டு, அப்பணிகளில் பங்கெடுக்காத வசதி படைத்தவர்களைப் பற்றிக் குறிப்பிடும் ஏளனச் சொல். இவர்களின் ஆலோசனைகள் பலவகைப்பட்டது. பொதுப் போக்குவரத்தில் சீர்திருத்தம் வேண்டிக் குரலெழுப்பிக் கொண்டே தங்கள் சொந்த வாகனத்தில் சுகமாகப் பயனிப்பார்கள். சுற்றுச் சூழல் பற்றிப் பேசும் இவர்கள், விலையுயர்ந்த வாகனங்களில் தனியாகப் பயனிப்பார்கள். பொதுக் கல்வியை மேம்படுத்த வேண்டுமென்று சொல்லிக்கொண்டே, தங்கள் குழந்தைகளை அதிகக் கட்டணம் செலுத்தித் தனியார் பள்ளியில் சேர்ப்பார்கள். இவர்கள் தங்கள் பிரபால்யத்தைப் பயன்படுத்தி, பிறரைத் தங்களுடைய கருத்துக்களுக்கு இணங்க வைப்பார்கள். இவர்கள் யாருக்காகப் பரிந்து பேசுவது மாதிரி தெரிகின்றதோ, அவர்களின் வாழ்க்கை முறை பற்றி ஏதும் அறிந்திருக்க மாட்டார்கள் என்று விமர்சிக்கப்படுவதுண்டு.
பார்க்க: checkbook activism - அறச் செயல்களில் நிதியளிப்பவராக மட்டும் செயல்படுதல் - கால அவகாசம் இல்லாததாலும், பணிப் பொருப்புக்களாலும் பொதுச்செவையில் ஈடுபடமுடியாதவர்கள். நிதி மட்டும் (நன்கொடை) வழ்ங்குவது.
பார்க்க: checkbook activism - அறச் செயல்களில் நிதியளிப்பவராக மட்டும் செயல்படுதல் - கால அவகாசம் இல்லாததாலும், பணிப் பொருப்புக்களாலும் பொதுச்செவையில் ஈடுபடமுடியாதவர்கள். நிதி மட்டும் (நன்கொடை) வழ்ங்குவது.
English
A term of disparagement applied to affluent citizens who advocate programs for poor and disadvantaged people but who do not tend to work or associate with them. It is similar to the term checkbook activism.