linear causality

நேர்க்கோட்டு காரண காரியத் தொடர்பு, நேர்க்கோட்டு காரணவியம், நேரியல் செயல்விளைவு

தமிழ் விளக்கம்

ஒரு செயலுக்கும் அதன் விளைவுக்குமுள்ள காரணகாரியத் தொடர்புகள் பலவகைப்படும். ஒரு விளைவை அதற்கு முந்தைய செயலோடு தொடர்புபடுத்திப் புரிந்துகொள்வது நேர்க்கோட்டு காரண காரிய (linear causality) வாதம். ஆனால் மனிதர்கள் எதிர்கொள்ளும் சமூக, உளவியல் பிரச்சனைகளை, நேர்க்கோட்டு செயல் விளைவை மட்டும் வைத்து எளிமையாகப் புரிந்துகொள்ள முடியாதாகையால், காரண காரிய விளைவுகளைப் பல்வேறு கோணங்களிலிருந்து புரிந்து கொள்ளவேண்டும். தொடர் செயல் நிகழ்வுகள் (Domino or Sequential causality - ஒன்றின் விளைவிற்கு அதற்கு முந்தைய செயல் மட்டுமல்ல அதற்கு முந்தைய செயலும் கூடக் காரணமாக அமையலாம்) சுழற்சி விளைவுகள் (cyclical casuality - ஒன்றையொன்று பாதிக்கும் செயல் விளைவுகள்) சுருள் விளைவுகள் (spiral casuality) (எங்கோ ஓரிடத்தில் ஆரம்பித்து சுற்றிச் சுழன்று வரும் விளைவுகள்) தொடர்புசார் விளைவுகள் (relational causality - ஒரு விளைவிற்கு காரணமான தொடர்புடைய இரண்டிற்கும் மேற்பட்ட செயல்கள்) பரஸ்பர விளைவுகள் (mutual causality - ஒன்றையொன்று பாதிக்கும் செயல்கள்)
எடுத்துக்காட்டாக, குடும்பச் சிகிச்சையாளர்கள், நேரியல் செயல்விளைவு கண்ணோட்டம், பிரச்சனைகளைப் பற்றிய தெளிவை அவ்வளவாகத் தராது என்றும், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள அதற்கு தொடர்புடைய அனைவரையும், அவர்களின் அனைத்துச் செயல்களையும் பரிசீலிக்க வேண்டுமென்றும் கூறுகின்றனர்

English

The idea that one event is the cause and another is the result or response. This notion has been questioned by many family systems theorists who suggest that it is too simplistic, at least where families are concerned. They say circular causality is a more accurate depiction of the way people, especially families, influence one another-that is, not in a cause–effect relationship but through a series of repeating cycles and interacting loops.