linkage
பிணைப்பு, தொடர்பு, சேர்த்தல், இணைப்புறுதல் / பிணையலுறுதல,
தமிழ் விளக்கம்
ஒரு வாடிக்கையாளருக்கு உதவும் பொருட்டோ அல்லது ஒரு சமூகக் குறிக்கோளை நிறைவேற்றும் பொருட்டோ, ஆதரவான நிறுவனங்களையும், அங்கு அளிக்கப்படும் சேவைகளையும், ஆர்வமுள்ள நிபுணர்களையும், தனி நபர்களையும், தன்னார்வக் குழுக்களையும் ஒருங்கிணைத்து உதவுதல் அல்லது குறிக்கோள் நிறைவேற உழைத்தல். சுருக்கமாகச் சொல்வதென்றால் தேவையையும், தேவையைப் பூர்த்தி செய்யும் வழிமுறைகளையும் ஒன்றிணைத்தல்.
பார்க்க: Collaboration - இணைவு ஆக்கம், உடனுழைப்பு, கூட்டுச் செயல்பாடு - ஒத்திசைவான குறிக்கோள்களை அடைய, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ அல்லது நிறுவனங்களோ தங்களுடைய அறிவு, ஆற்றல் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொண்டு, சுழல் முறையில் (recursive) செயல்படும் கூட்டுச் செயல்பாடு. சமூகப்பணியிலும், மனித சேவைத் துறையிலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறப்புத் தொழிலினர் (professional) ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு (தனி நபர், குடும்பம், குழு, சமுதாயம்), ஒன்றிணைந்து ஆற்றும் சேவை. அவர்கள் தங்களளவில் சுதந்திரமாகச் செயல்பட்டாலும், ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளரின் பிரச்சனை பற்றி கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு, அனைய (similar) சேவைகளைத் தவிர்த்து (avoid duplication of services) ஒரு குழுவாகச் செயல்படும் நிலை.

English
In social work, the function of bringing together the resources of different agencies, personnel, voluntary groups, and relevant individuals and brokering or coordinating their efforts on behalf of a client or social objective. See also collaboration.