listening skills

கேட்கும் திறன்

தமிழ் விளக்கம்

கேட்கும் திறன் என்பது செவித்திறன் சார்ந்தது மட்டுமல்ல. அது மற்றவர்கள் உரையாடும் போது உன்னிப்பாகக் கவனிப்பதும், உரையாடல் வெளிப்படுத்தும் மனோ நிலையைப் புரிந்துகொண்டு, முழு உரையாடலின் அர்த்தத்தை புரிந்துகொள்ளும் திறனும் அடங்கியது. நல்ல கேட்கும் திறன் என்பது உரையாடுபவரை நேருக்கு நேராக நோக்கி உரையாடுவது, அவர் பிரசன்னத்தை (இருப்பை) அங்கீகரிக்கும் படியாக நடந்து கொள்வது, உரையாடுபரின் உடல் மொழி மற்றும் சைகைகளைக் கவனிப்பது, உரையாடலின் உட்பொருளை அறிந்து கொள்ளும் பொருட்டு பொருத்தமான கேள்விகளைக் கேட்பது, உரையாடுபவரின் கருத்துக்களைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக உணர்வுகளை வெளிப்படுத்துவது, உரையாடலைச் சுருக்கி தான் புரிந்துகொண்ட தன்மையை வெளிப்படுத்தி ஆமோதிப்பைப் பெறுவது மற்றும் உரையாட நினைப்பவர் தன்னுடைய உணர்வுகளைத் தயக்கமின்றி பகிர்ந்து கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவது போன்ற செயல்கள் நல்ல கேட்கும் திறன் என்று கருதப்படுகிறது.

English

The ability to acquire and process the verbal and other cues of another and generally comprehend the meaning of the communication. When such skills are effective, they include looking at and acknowledging the communicator; hearing and noting the other's words and accompanying gestures; and providing feedback, questions, and expressions of understanding when appropriate.