literacy
கல்வியறிவு, எழுத்தறிவு, படிப்பால் உண்டாகும் அறிவு, கற்றறிவு
தமிழ் விளக்கம்
கடந்த காலத்தில் கல்வியறிவு என்பது எழுதும் மற்றும் படிக்கும் (வாசிக்கும்) திறனைக் குறித்தாலும் அதன் பொருள் விரிவாகி, எழுதுதல், படித்தல், கணக்கிடுதல் (3 Rs - reading, writing and arithmetic skills), மொழியைப் பயன்படுத்துதல், படங்களைப் பார்த்துச் செய்திகளைப் புரிந்து கொள்ளல், கலாச்சார சின்னங்கள் தெரிவிக்கும் செய்திகளைப் புரிந்து கொண்டு பயன்படுத்தும் திறன் போன்றவற்றையும் குறிக்கிறது. இந்தியாவில் கல்வியறிவு (Literacy in India) சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் முக்கிய குறிகாட்டியாக உள்ளது. 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா விடுதலை பெற்றபோது 12% ஆக இருந்த இந்தியக் கல்வியறிவு வீதம், 2011 ஆம் ஆண்டில் 74.04% ஆக வளர்ச்சியடைந்துள்ளது. இவ்வளர்ச்சி கூடுதலாக இருந்தபோதும் உலகளவில் விளங்குகின்ற சராசரி 84% கல்வியறிவிற்கும் குறைவானது. மத்திய, மாநில அரசுகளின் பல திட்டங்களுக்குப் பின்னரும் இந்தியாவின் கல்வியறிவு மெதுவாகவே வளர்ந்துள்ளது. 1990ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, இந்த வளர்ச்சி வீதத்தில் இந்தியாவில் அனைவரும் கல்வியறிவு பெற்றவர்களாக விளங்க, 2060 ஆண்டு ஆகும் என மதிப்பிட்டுள்ளது.
English
The ability to read and write.