literacy test

கல்வியறிவு / எழுத்தறிவு சோதனை

தமிழ் விளக்கம்

கல்வியறிவுச் சோதனை என்பது ஒரு மனிதனுக்கு எழுதப், படிக்கத் தெரியுமா என்பதை சோதித்தறிவது என்பதே பொதுவான நடைமுறை. ஆனால் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஷரத்தைப் பயன்படுத்தி, வாக்காளர்களாகப் பதிவு செய்ய வரும் எழுதப்படிக்கத் தெரியாத கருப்பினத்தவருக்கும், மிக ஏழைகளான வெள்ளை இனத்தவருக்கும் வாக்குரிமையையும், வேலை வாய்ப்பு போன்றவற்றை மறுக்கும் முகமாக, அரசியல் நோக்குடன் ஒரு நூற்றாண்டுக்கு மேல் இச்சோதனை நீடித்ததாக வரலாறு. பல போராட்டங்களுக்குப் பின்னரே இச்சோதனை முறை கைவிடப்பட்டது இன்றும் பலநாடுகளில் புதிதாகக் குடியேற விரும்புபவர்கள் அந்த நாட்டு தாய்மொழியில் எழுதப்படிக்கத் தெரியும் என்ற சோதனையில் தேர்ச்சி பெற்று நிரூபித்தால்தான், குடியுரிமை பெறமுடியும் என்ற நடைமுறை உள்ளது.

English

Examination of an individual's capacity for reading and writing. Often such exams have been used to keep some people of color, ethnic groups, and disadvantaged people from access to voting, jobs, education, or other opportunities.