lithium carbonate

லித்தியம் கார்பனேட்

தமிழ் விளக்கம்

லித்தியம் என்பது வெள்ளி போலும் தோற்றம் கொண்ட மென்மையான ஒரு உலோகம். இது தனிம அட்டவணையில் 3 ஆவதாக உள்ள ஒரு தனிமம். இதன் அணுவெண் 3, மற்றும் இதன் அணுக்கருவில் 4 நொதுமிகள் உள்ளன. இது மிகவும் மென்மையாக உள்ளதால், ஒரு கத்தியால் எளிதாக வெட்டலாம். உலோகங்கள் யாவற்றினும் மிகக்குறைவான எடை கொண்டது லித்தியம்தான். லித்தியத்தின் அடர்த்தியும், நீரில் பாதி அளவுதான். லித்தியம் மின்கலங்களிலே பெருமளவு பயன்படுகின்றது. இது இரத்தத்தில் இருப்பின் யூரிக் அமில அதிகரிப்பு மற்றும் உடல் நலக் குறைவை ஏற்படுத்தும். லித்தியம் முடக்கு வாதம் சிறுநீர்ப்பைக்கல், மன நோய், மன அழுத்தம் போன்ற குறைபாடுகளை ஏற்படுத்தும். இதற்கு சுத்திகரிக்கப்பட்ட லித்தியம் கார்போனேட்டு மருந்தாக அளிக்கப்படுகின்றது. மனநலம் பாதிக்கப்பட்டு சித்தபிரமை பிடித்த நோயாளிகளுக்கான சிகிச்சை முறையில் லித்தியம் கார்போனேட்டு பயன்படுகின்றது.
லித்தியம் பைபோலார் நோய் (மேனிக் டிப்ரஷன்), மேனியா இல்லாத டிப்ரஷன், சில வகை ஆளுமைக் கோளாறுகள் முதலியவற்றில் பயன்படுத்தப்படும் மருந்து. லித்தியம் ஒரு பழமையான ஆற்றல் வாய்ந்த, பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூட் ஸ்டெபிலைசர். லித்தியத்தின் அளவு போதுமான அளவு இருந்தால்தான் அது வேலை செய்யும். குறைந்தால் ஒரு பயனும் இல்லை. ஆனால் அளவு கூடினால் அபாயகரமான பக்க விளைவுகள் ஏற்படும். அதனால், லித்தியம் எடுத்துக் கொள்ளும் அனைவரும் (மனநல மருத்துவர் மட்டுமல்லாமல் அனைத்து மருத்துவர்களிடமும்) தங்கள் மருத்துவரிடம் தாங்கள் லித்தியம் கலந்த மருந்தை எடுத்துக் கொண்டிருப்பதாகவும், வேறு மருந்துகள் சிபாரிசு செய்யப்படும்போது அது ரத்தத்தில் லித்தியம் அளவைக் குறைக்காமலும், அதிகரிக்காமலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும்படியான மருந்துகளைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்.

English

The chemical compound that in carbonated form is used by physicians in the treatment of bipolar disorder. It is generally taken more than once a day and must be monitored closely by trained medical people. There is a narrow range of effective dosage above which toxicity occurs and below which it is ineffective. The most common trade names are Eskalith and Lithane.