little people
குறளன், வேடிக்கையாகக் காட்டப்படத்தக்க குள்ளன், சித்திரக்குள்ளன், வாமனன், குஞ்சன், சிறிய உருவினன், வடிவிற்சிறியவன்-ள், கூழையன்.
தமிழ் விளக்கம்
பெரியவர்களாயினும் மனிதர்களில் 4 அடி 11 இஞ்ச் உயரம் மிகாத, சிறிய கைகால்களைக் கொண்ட, உருவில் சிறுத்த சமூகத்தில் சிறுபான்மையினராக உள்ளவர்கள். இவர்களுக்கு பரிந்து பேசவும், இந்த மாதிரியான குழந்தைகளின் இயல்பான தோற்றமுடைய பெற்றோர்களுக்கு இந்நிலை பற்றி அறிவியல் பூர்வமான விளக்கமளிக்கவும் லிட்டில் பீப்பிள் ஆப் அமெரிக்கா என்ற அமைப்பு செயல்படுகிறது. குள்ளத்தன்மையின் காரணங்களைப் பற்றி ஆய்வு செய்யவும், குள்ளர்கள் மீது காட்டப்படும் பாரபட்சத்தை அகற்றவும், வேலை வாய்ப்பிற்காகவும், அவர்களுக்குகந்த வீட்டு வசதி, மனித உரிமைகள் மற்றும் பொழுது போக்கு வசதிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதும் இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களாகும். இவர்களை குள்ளர்கள் என்று ஏளனமாக அழைப்பதை விடுத்து சிறிய உருவினர்கள் என்று அழைக்க பிரச்சாரம் செய்கிறது.
English
The minority group comprising people who, as adults, are no taller than 4 feet 11 inches or who have disproportionately shorter limbs. The principal advocacy organization is Little People of America, which provides information to average-size parents of these children, raises funds for medical research, sponsors recreational activities, and advocates for equal opportunities for little people in jobs, housing, and civil rights. The organization also tries to get the public to call its members "little people" rather than "dwarfs" or "midgets."