living wage

வாழ்கூலி; வாழ்வூதியம், பிழைப்புமட்டக் கூலி

தமிழ் விளக்கம்

ஒவ்வொரு பிராந்தியத்திலும் அத்தியாவசியம் என்று கருதப்படுகின்ற அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், சமூக மற்றும் பொழுதுபோக்குச் செலவினங்களை ஈடுசெய்யும் முகமாகப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கூலி அல்லது ஊதியம் வாழ்வூதியம் எனப்படும். இந்த வாழ்வூதியம் பெரும்பாலான நாடுகளின் அரசுகள் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தைவிட அதிகமாகவே இருக்கும்
இந்தியாவில் வாழ்வூதியம்: தொழிலாளி தானும் தனது குடும்பத்தினரும் வாழும் வகையில், வெறும் அத்தியாவசிய உணவு, உடை, தங்குமிடம் என்பது மட்டுமில்லாமல், அடிப்படைத் தேவைகளான குழந்தைகளுக்குக் கல்வி, உடல் நலமின்மைக்கான பாதுகாப்பு, அத்தியாவசிய சமூகத் தேவைகள், முதிய வயது உட்பட்ட முக்கிய எதிர்பாராத நிகழ்வுகளைத் தாங்கும் காப்பீடு கொண்டதாக மிக உயர்ந்த மட்டத்திலான ஊதியமே வாழுவதற்கான ஊதியம் என்பதாகும். அப்படிப்பட்ட ஊதியத்திற்கு அரசு உத்தரவாதம் தருவதற்கு பதிலாக, அதை ஒரு கொள்கை நோக்கமாக மாற்றி வைத்திருக்கின்றனர். அதாவது இதைக் கொண்டு வருவதற்கு எந்தவொரு நடைமுறை நடவடிக்கைகள் செய்யப்படாமலும் காலக்கெடு இல்லாத நிலையிலும், அரசாங்கம் இதைச் செயல்படுத்துமென தொழிலாளி வர்க்கத்தையும் மக்களையும் நம்ப வைத்து வருகிறார்கள். இது ஒரு கொள்கை குறிக்கோளாகவே இருந்துவிட்டது என்பதை, சுதந்திரத்திற்கு பிறகு 66 ஆண்டுகள் ஆகியும், நகரத்திலும், கிராமப்புறங்களிலும் பெரும்பான்மையான நமது மக்கள் வாழ்க்கையை, பயங்கரமான வறுமையில் வாழ்கிறார்கள் என்ற உண்மையால் அறியலாம். நமது தொழிலாளி வர்க்கத்தின் பெரும்பாலான குடும்பங்கள், அடிப்படையான அத்தியாவசிய உணவும் உறைவிடமும் கூட இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய கல்வியைப் பற்றியும் சுகாதாரத்தைப் பற்றியும் அக்கறை கொண்டு செயல்படும் அரசு முயற்சிகள் இல்லை.

English

Income received by a worker that is enough to cover the costs of housing, food, health care, and other social and physical needs that are prevalent in that locality. What is generally considered a living wage tends to be much higher than a federally sanctioned minimum wage.