Local Indian Child Welfare Committee (LICWAC)

பகுதி அளவிலான இந்தியக் குழந்தைகள் நலக்குழு

தமிழ் விளக்கம்

இந்தியக் குழந்தைகள் நலச் சட்டம் என்பது அமெரிக்க இந்தியக் குழந்தைகளை அவர்கள் குடும்பத்திலிருந்தும், பூர்வீகக் கலாச்சாரத்திலிருந்தும் பிரித்து, இந்தியரல்லாத குடும்பங்களிலும், இந்தியத் தன்மையற்ற காப்பகங்களிலும் வளர்த்த வரலாற்றுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தக் கொண்டுவரப்பட்ட சட்டம். அமெரிக்க இந்தியக் குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கவும், அமெரிக்க இந்தியக் குடும்பங்களின் ஸ்திரத்தன்மையை பேணுதலும் இச் சட்டத்தின் குறிக்கோளாகக் குறிப்பிடப்பட்டது. அமெரிக்க இந்தியக் குடும்பங்கள் மற்றும் அவர்களின் கலாச்சார ஸ்திரத்தன்மையைக் காக்க இந்தச் சட்டம் மூன்று முக்கிய நிபந்தனைகளை விதித்தது. 1. எந்தச் சூழ்நிலையில் ஒரு அமெரிக்க இந்தியக் குழந்தை அதன் பிறப்புக் குடும்பத்திலிருந்து பிரிக்கப்படலாம் என்பதற்குக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. 2. அமெரிக்க இந்தியக் குழந்தைகளை ஏற்கும் காப்பகங்கள் அமெரிக்க இந்தியக் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும் 3. அமெரிக்க இந்தியக் குடும்பங்களின் ஸ்திரத்தன்மையைப் பேண பிரத்தியேக குடும்ப சேவைத் திட்டங்களை அமுல்படுத்த அரசை வலியுறுத்தியது. இந்த நடைமுறைகளைச் செயல்படுத்தும் போது, குழப்பங்களோ, சிக்கல்களோ ஏற்பட்டால் சமூகப்பணியாளர்களுக்கு உதவ, ஆலோசனை சொல்ல ஏற்படுத்தப்பட்ட பகுதி அளவிலான குழுக்கள்.

English

A legally (by federal and tribal laws) mandated group made up of American Indians from the relevant geographic region and tribe who provide input to social workers in state and private agencies in cases involving the possible removal of Indian children from their families. LICWACs are established to help enforce the Indian Child Welfare Act (IC WA) of 1978, and their recommendations (to keep the family intact if possible or otherwise to place the child with another Indian of the same tribe) are almost always followed.