long-term care (LTC)
நீண்ட காலப் பராமரிப்பு அல்லது வாழ்நாள் பராமரிப்பு
தமிழ் விளக்கம்
உண்ணல், உடுத்தல், குளித்தல், மலஜலம் கழித்தல், சமைத்தல், மருந்துன்னல், கடைகளுக்கு செல்லல் போன்ற அன்றாடச் செயல்பாடுகளைக்கூட செய்ய இயலாத வலுக்குறைவானவர்களுக்கு நீண்ட காலம் தொடர்ந்து உதவ செய்யப்படும் ஏற்பாடுகள். வயதானவர்களுக்கு, வளர்ச்சி ரீதியான குறைபாடு உள்ளவர்களுக்கு, ஊனமுற்றவர்களுக்கு, மன நோய் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மாதிரியான நீண்ட காலப் பராமரிப்பு தேவைப்படும். இந்தப் பாராமரிப்பு குடும்ப உறுப்பினர்களாலோ, நிபுணர்களாலோ, தனியார் மற்றும் அரசு நலக்காப்பகங்களாலோ, தங்குமிடங்களிலோ, பகல் நேரப் பராமரிப்பகங்களாலோ, சமுதாயம் சார்ந்த நிறுவனங்களாலோ வழங்கப்படலாம். மருத்துவ கண்காணிப்போடு, போக்குவரத்து மற்றும் நடமாட்ட / வழித்துணை உதவி, இல்லப் பராமரிப்பு, இரவுநேரக் கண்காணிப்பு, பொழுதுபோக்கு, வீட்டிற்கே சென்று உணவளித்தல், குறை தீர்ப்பு போன்ற உதவிகளும் நீண்டகாலப் பராமரிப்பில் அடங்கும் சேவைகளாகும்.
English
A system of providing social, personal, and health care services over a sustained period to people who in some way suffer from functional impairment, including a limited ability to perform the activities of daily living (ADL) such as dressing, eating, bathing, using the toilet, cooking, shopping, or taking medicine. LTC services are required mostly by older people, adults with developmental disabilities, people with mental illness, and people with acquired immune deficiency syndrome (AIDS). It is provided by professionals, family members, and volunteers under public or private auspices in nursing homes, boarding houses, assisted-living centers, day care centers, and community-based facilities. In addition to health care and case management services, LTC services include transportation, escort, homemaker services, night sitting, recreation, home health services, home meals, and ombudsperson services. See also longterm longterm care (LTLTC).