lordosis

கீழ்நோக்கி வளைந்த முதுகு, முதுகெலும்பு முன் குழி, முன் கூனம், தண்டெலும்பின் முன் நோக்கிய வளைவு

தமிழ் விளக்கம்

முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (cervical செர்வைக்கல்), 12 எலும்புகள் மார்புப் பகுதியிலும் (thoracic - தெராசிக்), 5 எலும்புகள் இடுப்புப் பகுதியிலும் (lumbar - லம்பார்), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகுப் பகுதியிலும் (sacral - சேக்ரல்), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்துள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக் கூடியதாகவும் இருக்கும். முதுகெலும்பில் மூன்று வகையான வளைவுகள் ஏற்படுவதுண்டு. இடுப்புப் பகுதியில் உள்ள முதுகுத்தண்டு முன்னோக்கி வளைந்திருப்பதை முன்கூனல் (lordosis) என்றும், மார்புப் பகுதி எலும்புகள் பின்நோக்கி வளைவதை பின்கூனல் (kyphosis) என்றும், முதுகுதண்டு முழுக்க பக்கவாட்டில் வளைந்திருப்பது நெளிமுதுகு (scoliosis) என்றும் அழைக்கப்படுகிறது.

English

Excessive curvature in the lower back. See also scoliosis and kyphosis.