loss

இழப்பு, விரயம், நட்டம், துரதிருஷ்டம், கைநஷ்டம், போக்கடி

தமிழ் விளக்கம்

மரணத்தினாலோ, விவாகரத்தினாலோ, பிரிவினாலோ, இயற்கைப் பேரழிவினாலோ அல்லது குற்றமிழைத்ததாலோ ஒருவரிடம் இருக்கும் உடமைகள் பறிபோதல் அல்லது இழந்திருக்கும் நிலை. இழப்புதான் எல்லா மன அழுத்தங்களுக்கும் காரணமாகி, மனிதர்கள் முடங்கக் காரணமாக அமைகின்றது. ஆகையால் சமூகப்பணியாளர்கள் தங்களின் பெரும்பாலான நேரத்தை இழப்பினால் துயருறும் தனிநபர்களுக்கும், குடும்பங்களுக்கும், சமுதாயத்திற்கும் அந்த இழப்புக்களுக்கான நிவாரணத்தை வழங்குவதிலும், அந்த இழப்புக்களிலிருந்து மீண்டு வரும் திறனை அளிப்பதிலும் செலவிடுகின்றனர்.

English

The state of being deprived of something that was once possessed, as a result of death, divorce, disaster, or crime. Social workers and other professionals consider loss to be the crucial element in crisis and a major precipitator of many forms of depression. Many social workers spend most of their time helping individuals, families, and communities adjust to loss by helping them to compensate or substitute for loss in the short and long term.