love

விருப்பம், பிரியம், அபிமானம், சினேகம், காமவாயில், அன்புகொள்ளுதல், அன்புசெய்தல், அன்புவைத்தல், அருள், அன்பு, பற்று, பற்றார்வம், பாசம், நேசம், நட்பு, காதல், நேயமுறுதல்

தமிழ் விளக்கம்

அன்பு என்பது நெருக்கமான உள்ளப் பிணைப்பு தொடர்பான ஒர் உணர்வும், அநுபவமாகும். அன்பு என்ற சொல்லை ஆங்கிலத்தின் 'love' என்ற சொல்லுக்கு இணையாகக் கருதினாலும், 'love' என்னும் சொல் குறிக்கும் எல்லாப் பொருளையும் 'அன்பு' என்னும் சொல் குறிப்பதில்லை. 'love' என்பதற்கு ஆங்கிலத்தில் பல பொருள்கள் உள்ளன. பொதுவாக ஒரு பொருள் அல்லது செயலின் மீது உள்ள 'விருப்பம்' (நான் பாயாசம் 'விரும்பி' உண்பேன்), இருவருடையே காணப்படும் பொதுவான அன்பு, மிக நெருக்கமான 'காதல்' உணர்வு வரை பல பொருள்களில் அச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. அன்பு என்ற சொல்லுக்குரிய உணர்வும் எண்ணக்கருவும் தமிழுக்குத் தனித்துவமானது எனலாம். இவ்வாறு மொழிகளிடையே 'அன்பு' என்னும் பொருள் தரக்கூடிய சொற்கள் குறிக்கும் உணர்வுகள் பலவாறான வேறுபாடுகளைக் கொண்டவையாக இருப்பதால், அன்புக்கு உலகம் தழுவிய வரைவிலக்கணம் ஒன்றைக் கொடுப்பது கடினமானது.
தமிழிலும் அன்பு என்னும் உணர்வு பல்வேறு மட்டங்களில் வெளிப்படுவதைக் காணலாம். தாய் மீதான அன்புக்குச் சிறப்பான இடம் உண்டு. அன்பு அதன் பல்வேறு வடிவங்களில் மனிதர்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு காரணியாக உள்ளது. அத்துடன் அன்பின் உளவியல் முக்கியத்துவம் காரணமாக ஆக்கக் கலைகளில் அது ஒரு முக்கியமான கருப்பொருளாக ஆளப்படுகிறது. கிரேக்கச் சொல்லான αγάπη அகாப்பேயும் (Agape), தமிழில் அன்பு எனும் சொல்லும் நெருக்கமான பொருள்கொண்டது. இந்த அன்பில் பாலியல் தொடர்புபட்ட உணர்வுகளுக்கு இடமில்லை. இது கடவுளுக்கும் மனிதனுக்கும், மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான அன்பை ஒத்தது எனவும் கருதப்படுகின்றது.

English

A combination of biologically based, culturally modified perceptions, feelings, and actions signifying strong affection and attachment. Every person's experience of love and way of expressing it are unique. There is considerable variability between people and even within the same person from one time to the next. This is because each person's genetic makeup, physiology, stage of development, cultural background, and immediate stimuli, all of which contribute to the way love is experienced, vary. Thus, it is probable that when any two people profess love, they are not communicating about exactly the same thing; also what one person means when professing love one minute is probably not what that person means when using the term later. The context in which the term is used also influences its meaning. It is also commonly used to signify eroticism ("to make love"), strong interest ("to love music"), and philanthropy ("to love humanity").