lumbago

இடுப்பு வாதம், கீழ் வாதம், இடுப்புவலி, கீழ்முதுகுவலி, அடிமுதுகுவலி, நாரிப்பிடிப்பு, சள்ளைக்கடுப்பு

தமிழ் விளக்கம்

முதுகு வலி என்பது உடலின் பின்பக்கத்தில் உணரப்படும் வலியாகும். இது பொதுவாக முதுகெலும்பிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள், கணுக்கள் அல்லது மற்ற அமைப்புகளில் தோன்றுகிறது. இந்த வலியைக் கழுத்துவலி, மேல் முதுகு வலி, கீழ்முதுகு வலி அல்லது வாலெலும்பு வலி என்று பிரிப்பார்கள். இது திடீரென்றும் தோன்றலாம் அல்லது நாட்பட்ட வலியாகவும் இருக்கலாம். இது நிலையானதாக இருக்கலாம் அல்லது வந்து போவதாக இருக்கலாம். ஒரே இடத்திலிருக்கலாம் அல்லது மற்ற பாகங்களுக்குப் பரவுவதாக இருக்கலாம். இது மந்தமான வலியாக அல்லது ஊடுருவிப் பாயும் அல்லது மிகுவான அல்லது எரியும் உணர்வையும் உண்டாக்கலாம். வலி கரங்களுக்கும் (கைக்கும்), மேல் முதுகுக்கும் அல்லது கீழ் முதுகுக்கும் (கால் அல்லது பாதத்திற்கும் செல்லக்கூடும்) பரவலாம். வலியல்லாமல் பலவீனம், உணர்ச்சியின்மை அல்லது முள் போன்று குத்துதல் போன்ற மற்ற அறிகுறிகளும் ஏற்படலாம். முதுகுவலி வயது வித்தியாசமின்றி பெரும்பாலானவர்களைத் தொந்தரவு செய்யும் பிரச்சனையாகும். அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெறச் செல்லும் முக்கியமான காரணங்களில் கீழ்முதுகுவலி (லம்பாகோ என்றும் அழைக்கப்படுவது) ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. வயது வந்தவர்களில் பத்தில் ஒன்பது பேர் தங்கள் வாழ்க்கையில் எப்போதாவது ஒரு முறை முதுகுவலி அனுபவிக்கிறார்கள். வேலை செய்யும் பெரியவர்களில், பத்தில் ஐந்து பேர் ஒவ்வொரு வருடமும் முதுகுவலியை அனுபவிக்கிறார்கள்.
பல நாடுகளில் முதுகுவலி பொருளாதார உற்பத்தியில் பெருத்த இழப்பை ஏற்படுத்துவதாக உணரப்பட்டிருக்கின்றது. 45 வயதுக்குக் குறைந்தவர்களின் செயல்பாடு குறைவதற்கான முதல் காரணமாகவும், மருத்துவரைப் பார்க்க வேண்டி கட்டாயமேற்படுத்தும் இரண்டாவது காரணமாகவும், மருத்துவமனையில் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெற ஐந்தாவது காரணமாகவும், அறுவைச் சிகிச்சைக்கான மூன்றாவது பெரிய காரணமாக முதுகு வலி அமைந்துள்ளது முதுகுவலிக்காக விடுமுறை எடுப்பதனால் இழப்பு ஏற்படுகிறது. சில நாடுகள் இந்தப் பிரச்சனையைக் குறைக்க விழிப்புணர்ச்சிப் பிரச்சாரங்களைத் துவக்கியுள்ளன, உதாரணத்திற்கு நிர்வாகிகளுக்கான வலிமையான முதுகு (Executives better Backs) பிரச்சாரம் அமெரிக்காவில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

English

A term, used mostly by older people, for lower back pain.