lupus
முகப்புற்று, தோல் அழிநோய், தோல் முடிச்சு நோய், முருடு, செம்முருடு, தோல் செந்தடிப்பு, தோல் படைநோய் வகை, சுயபாதிப்புக் குறைபாடு நோய்
தமிழ் விளக்கம்
உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி நோய்களைத் தடுப்பதெற்கேன்றே மனித உடலில் சில செல்கள் (anti bodies) இருக்கின்றன. அவைகள் ஏதாவது பாக்டீரியா அல்லது வைரஸ் உடம்பிற்குள் வந்ததும், அவைகளைக் கொல்ல, எதிர்ப்பு சக்தியை உருவாக்கிப் போராடும். ஜலதோசம், காய்ச்சல் உண்டாக்குகின்ற வைரஸை எல்லாம் எளிதாக அழித்துவிடும். டி பி, லெப்ரோஸி போன்ற பாக்டீரியாக்களை ஓரளவு தடுக்கும். அதை முழுமையாகத் தடுக்க ஆண்ட்டிபயாட்டிக்ஸ், ஆண்ட்டி பாக்டீரியல் ஏஜண்டுகள் (அதாவது மருந்து மாத்திரைகள்) மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த எதிர்ப்புச் சக்திகளை உருவாக்கிப் போராடும் செல்களைத் தாக்குவதுதான் எச் ஐ வி.
நம் உடம்பில் உள்ள எதிர்ப்பு சக்தி, நம் உடம்பில் உள்ள நல்ல செல்களையே தாக்க ஆரம்பிப்பதுதான் லூபஸ் என்கிற வியாதியின் தன்மை, இது ஒரு autoimmune disease. வெளியிலிருந்து வரும் கிருமிகளைக் கொல்ல உருவாக்கப்பட தற்காப்பு முறை (autoimmune) உடலிலே உள்ள நல்ல செல்களையே தாக்குவதால் ஏற்படும் வியாதிகளுக்கு பெயர்தான் லூபஸ். இது ஒரு சுயபாதிப்புக் குறைபாடு நோய். இது உடலின் செல்களையும் திசுக்களையும் தாக்கி, அழற்சியையும் திசுச் சிதைவும் ஏற்படுத்தும். லூபஸ் பொதுவாக இதயம், மூட்டுகள், தோல், நுரையீரல்கள், இரத்த நாளங்கள், கல்லீரல், சிறுநீரகங்கள், மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றைப் பாதிக்கிறது. இதன் அறிகுறிகள் மற்ற நோயுடையதாகக் கருதப்பட்டு நோய் கண்டறிய முடியாததாக தவறாகக் கணக்கிடப்படுகிறது. கிட்டத்தட்ட 30% நோயாளிகள் சில தோல்நோய் சார்ந்த அறிகுறிகளைக் கொண்டுள்ளனர். (65% பேர் ஏதேனும் ஒருநிலையில் இவ்வகை அறிகுறிகளைப் பெறுகின்றனர்), 30% முதல் 50% பேர்கள் பழமையான படர் தாமரை (அல்லது பட்டர்ஃபிளை சொரி) அறிகுறிகளைக் கொண்டுள்ளனர்.

English
A chronic disease in which the antibodies in the person's immune system attack the body's own substances. The cause of the disease is not fully understood. The disease ranges from mild to fatal and most often affects younger women. It can attack only the skin or can attack any organ. Symptoms include a butterfly-shaped rash on the face and tissue inflammation. Heart, joint, kidney, skin, and connective tissue disorders are also common. The disease is often misdiagnosed or not taken seriously.