Lutheran World Federation (LWF)

லூதரன் திருச்சபைகளின் உலகக் கூட்டமைப்பு

தமிழ் விளக்கம்

சுவிட்ஜர்லாந்து நாட்டிலுள்ள லண்ட் (Lund) என்னும் நகரில் 1947 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பாட்டது. இதில் 79 நாடுகளைச் சேர்ந்த 144 தேசிய அளவிலான அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. இந்தக் கூட்டமைப்பில் இணைந்துள்ள திருச்சபைகளின் பொதுநலன் தொடர்பான காரியங்களிலும், கிறிஸ்தவ மதப் பிரிவுகளுக்குள்ளும், பிற மதப் பிரிவினருக்குமுள்ளும் சமய நல்லிணக்க முயற்சிகளையும், இறையியல் விவகாரங்கள் மற்றும் கல்வியையும், மனிதாபிமானச் செயல்களிலும், மனித உரிமை மற்றும் தகவல் தொடர்பு போன்ற காரியங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இயற்கைப் பேரழிவுகளால் (வெள்ளம், சூறாவளி, பூகம்பம், வறட்சி, போர்கள், உள்நாட்டுக் கலவரங்கள்) பஞ்சம், வறுமையால், தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகின்றனர். இந்தக் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின், பேரிடர் நிவாரணப்பணி குழுமத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்.

English

The international Lutheran Church-based organization that raises funds and provisions and distributes needed resources to those populations victimized by poverty and di sasters, including famine, epidemics, floods, hurricanes, droughts, earthquakes, war, and civil disorder. The LWF coordinates many of its activities with the United Nations Disaster Relief Organization (UNDRO) and through the Steering Committee for International Relief, other church organizations, and private relief groups.