lymphoma

நிணநீர் திசுக்கட்டி, நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய், வடிநீரகப்புத்து

தமிழ் விளக்கம்

நிணநீர்க்கணு (Lymph Node) என்பது நோய் எதிர்ப்பாற்றல் முறையில் பங்கு வகிக்கும் சிறிய பந்துபோன்ற ஒரு உள் உடலுறுப்பு. நிணநீர்க் கணுக்கள் உடல் முழுவதுமாக பல இடங்களிலும் பரவி இருப்பதுடன், நிணநீர்க் கலன்களால் இணைக்கப்பட்டிருக்கும். இவை நோயெதிர்ப்பு சரியான முறையில் நடைபெறுவதற்கு இன்றியமையாதவை ஆகும். வெளியிலிருந்து வரும் பொருட்களுக்கு ஒரு வடிகட்டி போல அல்லது பொறி போல தொழிற்பட்டு, அவற்றிலிருந்து உடலைப் பாதுகாக்கும். நோயைக் கண்டறிவதிலும், இந்த நிணநீர்க்கணுக்கள் உதவியாக இருக்கின்றன. குறிப்பிட்ட சில நோய் நிலைகளில் அழற்சிக்குட்படுவதுடன், இக்கணுக்கள் பெருத்தும் காணப்படும். இந்நிலை தொண்டை அழற்சி போன்ற நோய்களில் எளிமையாகவும், புற்றுநோய் போன்ற நோய்களில் உயிருக்கே இடர் விளைவிப்பதாகவும் இருக்கும். இவ்வாறான நிலைகளில் உயிரகச் செதுக்கு (biopsy) மூலம் இவை ஆராயப்படும்.
நிணநீர்ப் புற்று என்பது நான்கு வகையான புற்றுநோய்களில் ஒருவகை. புற்றுப்பண்பு கொண்ட கட்டி (carcinoma). அவற்றில் பொதுவானவை மார்பக, ப்ரோச்டெட் (சுக்கிலவகம்), லங் (நுரையீரல்), கொலோன் (பெருங்குடல்) புற்றுநோய் போன்றவையாகும்.
சதைப்புற்று: (சர்கோமா - sarcoma) இணைப்புத் திசு அல்லது மேசென்கிமல் (கரு உடல் நார் திசு வலைசார்ந்த) உயிரணுக்கள், போன்ற இடங்களில் இருந்து உருவாகும் புற்றுப்பண்பு கொண்ட கட்டிகள் (malignant tumor).
லிம்போமா (lymphoma - நிணநீர் திசுக்கட்டி) மற்றும் லுகேமியா (இரத்தப்புற்றுநோய்): இரத்தத்தை உருவாக்கும் உயிரணுக்களில் ஏற்படும், பரவும் புற்று.
கருச்செல் கட்டி (ஜெர்ம் செல் ட்யுமர் germ cell tumor): வயதுவந்தவர்களில் testicle (விரை, விதை) மற்றும் ஓவரி (சூலகதில்) தோன்றும் புற்றுநோய் வகை.

English

One of the four major types of cancer (including carcinoma, sarcoma, and leukemia), which involves the lymphatic system.