magical thinking

மந்திரச் சிந்தனை, அமானுஷ்ய சிந்தனை

தமிழ் விளக்கம்

மனிதர்களின் சிந்தனை முறை பலவகையானது. தன்வயப்பட்ட (autistic) சிந்தனை, தன் மகிழ்வெண்ணச் (derestic) சிந்தனை, விமர்சனச் (critical) சிந்தனை, மந்திரச் (magical) சிந்தனை, முதன்மைச் செயல்முறைச் சிந்தனை (primary process) என்று சிந்தனை முறைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. Magical Thinking என்பது செயலேதும் செய்யாமல் மந்திரத்தில் மாங்காய் காய்க்கும் என்று நம்புவதற்கு ஒப்பானது. ஒன்றைப் பற்றி எண்ணுவதாலும், அதை மனக்கண்ணால் மீண்டும் மீண்டும் கற்பனை செய்வதாலும் அது நடந்தேறும் என்று நம்புவது. எடுத்துக்காட்டாக சகுனம் பார்த்துச் செயல்படுவது, எண்கணிதத்தில் நம்பிக்கை வைப்பது, ராசிக்கல் மோதிரம் அணிவது போன்ற நம்பிக்கைகள் தாங்கள் நம்புவது நடக்க உதவும் என்று பின்பற்றும் சில முறைகள். இந்த மந்திரச் சிந்தனை குழந்தைகளிடம் காணப்படும். பெரியவர்களாகியும் தொடர்ந்தால் அது மனச்சிதைவு நோயின் அறிகுறியாகும். வாழ்வில் the power of positive thinking போன்ற கருத்தாக்கங்கள் மனதை அமைதிப்படுத்தவும், தன்னம்பிக்கை பெறவும் உதவினாலும், அது எல்லை மீறுகையில் மூடநம்பிக்கைக்கே இட்டுச் செல்லும். எண்ணம் போல வாழ்வு என்பது நிரூபிக்கப்படாத உண்மை. இது தன்னம்பிக்கை இல்லாதவர்களிடம் மருட்சியையும், மனச்சிதைவையும் பிற ஆளுமைக் கோளாறுகளையும் உருவாக்கிவிடும்.

English

The pattern of reasoning and mental imaging in which an individual attributes experiences and perceptions to unnatural phenomena. For example, a client might attribute winning a lottery bet to wearing a lucky hat. Magical thinking is often seen in young children and in those with schizophrenia. It is the idea that one's thoughts or desires influence the environment or cause events to occur. It is normal in children younger than age five and is also commonly seen among some uneducated people and in certain relatively isolated societies. Among mature people in modern society, it may be a symptom of certain mental disturbances such as paranoia. See also ideas of reference.