magnetic resonance imaging (MRI)

காந்த மீளதிர்வு படம் / படமாக்கல்; காந்த அதிர்வு சோதனை / பரிசோதனை

தமிழ் விளக்கம்

எம்.ஆர்.ஐ (MRI) என்பது மாக்னேடிக் ரெசனன்ஸ் இமேஜிங் (Magnetic Resonance Imaging) என்கிற சொற்றொடரின் சுருக்கம். இதை தமிழிலில் காந்த மீளதிர்வு படம் / படமாக்கல், காந்த அதிர்வு சோதனை / பரிசோதனை என்று சொல்லலாம். உடலிலுள்ள சில காயங்களை / உருப்புக்கள் சேதமடைந்துள்ளதை வெறுங்கண்ணால் காண முடியாது. அதை எக்ஸ்-ரே (X-ray), சி.டி. ஸ்கான் (CT scan), அல்ட்ராசவுண்ட் ஸ்கான் (Ultrasound scan), நியூக்ளியர் ஸ்கான் (Nuclear scan) போன்ற கருவிகளாலும் துல்லியமாகக் காணமுடியாது. அவ்வாறு கண்டுபிடிக்க முடியாத காயங்களை / சேதங்களை மிகைப்படுத்திப் பார்க்க எம்.ஆர்.ஐ ஸ்கேன் உதவுகிறது. எம்.ஆர்.ஐ மூலம் மூளை கட்டி, மூட்டு வலிகள் மற்றும் மாரடைப்பு போன்ற பெரும் வியாதிகளைக் கூட கண்டுபிடிக்க முடியும். எனவே சில கண்டுபிடிக்க முடியாத தீவிர நோய்களைக் கண்டுபிடிக்க, எம்.ஆர்.ஐ பேருதவி புரிகிறது. எம்.ஆர்.ஐ ஸ்கான் முறையில், எக்ஸ்-ரே (X-ray), சி.டி. ஸ்கான் (CT scan) போன்ற ஸ்கான் முறைகளில் உபயோகப்படுத்தப்படும் உடலுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய ஊடுகதிர்கள் (ionizing radiation, ie, X-rays) கிடையாது. எம்.ஆர்.ஐ. ஸ்கானில் இருக்கும் காந்தத்தன்மையால் நம் உடலுக்கு எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாது. காந்தத்திலிருந்து வெளியே எடுத்ததும், ஸ்கான் செய்யப்பட்டவரின் உடல் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். ஒவ்வொரு ஸ்கான் முறைக்கும் சில பிரத்தியேகமான உபயோகங்கள் உள்ளன. உதாரணமாக நுரையீரலைப் படம் பிடிக்க சி.டி.ஸ்கான் தான் உசிதம். மூட்டுகளினுள்ளே உள்ள மென் தசைகளை (ligaments, tendons) படம் பிடிக்க எம்.ஆர்.ஐ தான் உசிதம். சில / பல இடங்களில் இரண்டில் எதை உபயோகித்தாலும் தப்பில்லை (உதாரணம்: மூளை). பல நேரங்களில் எந்த ஸ்கான் முறையை உபயோகிக்கலாம் என்பதை அந்த மருத்துவமனையிலோ அந்த ஊரிலோ எது வசதியாக உள்ளது என்பதைப் பொறுத்தே மருத்துவர்கள் முடிவு செய்கிறார்கள்.

English

A computer-based diagnostic tool physicians use to envision neurological activity and other physiological processes. MRI is replacing computerized axial tomography (CAT scan), because it provides crosssectional two-dimensional images of higher resolution without exposing the patient to radiation. magnet school assistance