Mahatma Gandhi National Rural Employment Guarantee Act-2005 (MGNREGA)
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டம் 2005
தமிழ் விளக்கம்
1960 ஆம் ஆண்டு முதல் கிராமப்புற மனித வளத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த இந்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு வேலை வாய்ப்புத் திட்டங்கள், உணவுப் பாதுகாப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்திய அனுபவத்திலிருந்து, 2005 ஆம் ஆண்டு தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை அறிமுகப்படுத்தி, 2006 ஆம் ஆண்டு 200 மாவட்டங்களில் வெள்ளோட்டம் பார்த்தபின், 2007 ல் 130 மாவட்டங்களுக்கும் பின் 2008 ஆம் ஆண்டு மீதமிருந்த 285 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தி நாடு முழுவதிலும் (ஜம்மு காஷ்மீர் நீங்கலாக) அமுலுக்கு கொண்டுவந்தது. 2009 ஆம் ஆண்டு இச்சட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டம் என்று பெயர் மாற்றப்பட்டு, உலக வங்கி குறிப்பிட்டது மாதிரி 'உலகின் மிகப் பெரிய உணவு மற்றும் சமூகப்பாதுகாப்பு மற்றும் பொது வேலை வாய்ப்பிற்கான திட்டமாக பரிணமித்துள்ளது. இத்திட்டம், ஒவ்வொரு நிதியாண்டிலும், ஊரகப் பகுதியில் திறன்சாரா உடலுலைப்பிணை மேற்கொள்ள விருப்பமுள்ள 18 வயதுக்கு மேற்ப்பட்டோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் 100 நாட்களுக்குக் குறையாமல் வேலை வாய்ப்பினை அளிப்பதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட, தரமான மற்றும் நிலையான சொத்துக்களை உருவாக்குவதை” குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது.
English
National Rural Employment Guarantee Act 2005 (NREGA) was later renamed as the "Mahatma Gandhi National Rural Employment Guarantee Act" (MGNREGA), is an Indian labour law and social security measure that aims to guarantee the 'right to work'. It aims to enhance livelihood security in rural areas by providing at least 100 days of wage employment in a financial year to every household whose adult members volunteer to do unskilled manual work. MGNREGA was initially implemented as National Rural Employment Guarantee Act (NREGA) in 200 selected backward districts in India on February 2, 2006. It was extended to an additional 130 districts with effect from April 1, 2007. Later, the remaining 285 districts were covered from April 1, 2008. The National Rural Employment Guarantee (Amendment) Act, 2009 renamed NREGA as MGNREGA.