mainstreaming

மையநீரோட்டம்

தமிழ் விளக்கம்

மையநீரோட்டம் என்பது வெகுஜன ஊடகங்களால் பரவலாக்கப்பட்ட சிந்தனைப் போக்கு. முதன்மைச் சமுதாயத்தின் (main society) பண்பாட்டுக் கூறுகளிலிருந்து மாறுபடுகின்ற, குடிவழக்குகளுக்கு எதிராகச் சிந்திக்கின்ற, நடக்கின்ற துணைப் பண்பாடு (subculture) கொண்டவர்களையும், மாற்றுப் பண்பாடு கொண்டவர்களையும் (counter culture), சில வழிபாட்டு முறைகளில் வெறி ஈடுபாடு (cult followers) கொண்டவர்களையும், பெரும்பான்மையினரின் சிந்தனைப் போக்கிற்குத் திருப்புதலே மைய நீரோட்டத்தில் இணைப்பது. துணை மற்றும் எதிர்ப் பண்பாட்டுச் சிந்தனையுள்ளவர்கள் மைய நீரோட்டப் பண்பாட்டை அழகிழந்த, ஜீவனற்ற பண்பாடு என்று கேலி பேசுவதுண்டு. ஆனால் மனித சேவைப்பணிகளில், குறிப்பாக சமூகப்பணியில், இயலாமையால் (disability) அவதிப்படும் குழந்தைகளை, இயல்பான குழந்தைகளோடு இணைவித்துக் கற்றுக்கொள்ள வைக்கும் முறையை மையநீரோட்ட அணுகுமுறை எனலாம் . இயலாமை காரணமாக அவர்களைப் பிரித்து, அவர்களுக்கென்று விசேசக் கல்வி கொடுத்தாலும், அவர்களை இயல்பான குழந்தைகளுடன் இணைவிக்கவோ ஒருங்கிணைக்கவோ இயலாதாகையால், மையநீரோட்ட அணுகுமுறையே அதற்குப் பொருத்தமானது.

English

Bringing people who have some exceptional characteristics into the living, working, or educational environments to which all others have access. In education, for example, a child with certain learning or physical disabilities is permitted to attend classes and activities available to all the other children. Mainstreaming permits individuals to have greater opportunity for socialization and integration. However, it also subjects them to greater risks of social rejection and reduction of special care. See also "least restrictive environment" (LRE).