maintenance therapy

பராமரிப்புச் சிகிச்சை

தமிழ் விளக்கம்

ஒரு நோயைக் குணப்படுத்தி, அதை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும், அது மேலும் பரவாமலிருக்கவும் செய்யப்படும் முயற்சிகள் என்று பொதுவாகப் பொருள் கொள்ளப்பட்டாலும், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்க, குறைவான தீங்கு விளைவிக்கக்கூடிய, சட்ட விரோதமற்ற, போதைக்கு மாற்றான மாற்று மருந்துகளைக் கையாண்டு சிகிச்சையளிக்கும் முறையே பராமரிப்பு சிகிச்சை என்று சமூகப்பணியில் பொருள் கொள்ளப்படுகிறது. இது முள்ளை முள்ளால் எடுப்பது மாதிரி. இம்மாதிரியான பராமரிப்புச் சிகிச்சை முறைகள், மாற்று மருந்துகளோடு நிபுணர் வழிகாட்டலையும், சரியினையினரின் ஆதரவையும் (peer group support), ஆலோசனைகளையும் ஒருங்கிணைத்து உபயோகப்படுத்தும். ஹெராயின் போதை அடிமைகளுக்கு மெதடோன் என்ற மாற்று மருந்தும், ஒபிய போதை மருந்துப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க LAMM என்ற ஆல்பா அசிடைல் மெதடால் என்ற மருந்தும் மாற்றாகக் கொடுக்கப்படுகிறது.

English

In the treatment of persons with drug addictions, the use of substitute drugs, usually those that are less harmful and not illicit, to help wean the client from the original substance. Maintenance therapies ideally use the substitute drug along with professional intervention, peer support, and counseling. Methadone treatment for heroin users is the most well known of these therapies. LAMM and naltrexone treatment are similar programs.